News July 11, 2024

தமன்னாவை காதலிக்கும் விஜய் வர்மா?

image

பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் வர்மாவும் நடிகை தமன்னாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த விஜய் வர்மா, ஆரம்பத்தில் இந்த செய்தி தங்களுக்கே அதிர்ச்சியாக இருந்ததாகவும், தற்போது இந்த புரளியை இருவருமே என்ஜாய் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கும், தமன்னாவுக்கும் இடையே ஆழமான, அன்பான பந்தம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

News July 11, 2024

காவல்துறை மீது ஆம்ஸ்ட்ராங் குடும்பம் அதிருப்தி?

image

ஆறுதல் சொல்வதற்காக ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வரிடம், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்க அவரது குடும்பத்தினர் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த திமுக நிர்வாகிகள், தலைவர் வரும் போது சங்கடப்படுத்தும் மாதிரியாக எதுவும் பேசிவிட வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். அதனால்தான், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் அமைதி காத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News July 11, 2024

ஆம்ஸ்ட்ராங்கை கொன்ற 11 பேருக்கு போலீஸ் காவல்

image

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க, எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்த அவரை, கடந்த 5ஆம் தேதி மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த விவகாரத்தில், ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன் உள்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

News July 11, 2024

INDIA கூட்டணி தலைவர்கள் நாளை சந்திப்பு

image

இன்று மும்பை செல்லும் மேற்கு வங்க முதல்வர் மம்தா, INDIA கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரை நாளை சந்தித்து பேச உள்ளதாகக் கூறியுள்ளார். அம்பானி மகன் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மும்பை செல்லும் அவர், INDIA கூட்டணி தலைவர்களையும் சந்திக்கிறார். இந்த சந்திப்பில் அகிலேஷ் யாதவும் கலந்துகொள்வார் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பின் முதன்முறையாக இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

News July 11, 2024

மியூசிக்கல் காதல் படத்தில் அர்ஜுன் தாஸ்

image

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்குகிறார். மியூசிக்கல் காதல் படமாக உருவாக உள்ளதாக அர்ஜுன், அதிதி ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

News July 11, 2024

அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் உண்மையா?

image

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை லண்டனில் சொத்து வாங்கி வைத்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக, தன் மீதான குற்றச்சாட்டுக்கு உடனே செல்வப்பெருந்தகை பதில் அளிப்பது வழக்கம். ஆனால் அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து மெளனம் காக்கிறார். இதனால் இக்குற்றச்சாட்டு உண்மையோ? என அவரது கட்சியினரிடையே கேள்வி எழுந்துள்ளது.

News July 11, 2024

உ.பியில் மின்னல் தாக்கி 38 பேர் பலி

image

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில், மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 38 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் சில நாள்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், சுல்தான்பூர், பிரக்யாராஜ் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பிரதாப்கர் பகுதியில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

News July 11, 2024

அரையிறுதி: நாளை இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

image

உலக சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில், லீக் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் நாளை 2 அரையிறுதிப் போட்டிகள் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நடைபெறும் போட்டியில் பாக்., – வெ.இ அணிகளும், இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா – ஆஸி., அணிகளும் மோதுகின்றன. இறுதிப் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.

News July 11, 2024

APPLY NOW: மத்திய அரசில் 8,326 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 எம்டிஎஸ், ஹவில்தார் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற 18 – 25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, உடற்தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு <>www.sssc.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்.

News July 11, 2024

பீல்டிங் சொதப்பல் அணிக்கு சவாலாக உள்ளது: ரஸா

image

ஜிம்பாப்வே அணிக்கு பீல்டிங் எப்போதுமே பிரச்னையாக உள்ளதாக அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 3ஆவது போட்டியிலும் இதே சிக்கல் தொடர்ந்ததால், இந்திய அணிக்கு கூடுதலாக 20 ரன்களை கொடுத்துவிட்டோம் என வேதனை தெரிவித்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

error: Content is protected !!