India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக கர்நாடகாவில் தலைமை ஆசிரியர் ஒருவர் செய்யும் செயல் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதஹலட்டி கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 1ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கில் ₹1000 செலுத்துகிறார் அவர். மேலும், மாதம் ஒருமுறை வினாடி-வினா போட்டி நடத்தி பரிசும் வழங்குகிறார். இவரது முயற்சியால் அங்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் அரசு பங்களாவில் இருந்து ஸ்மிருதி இரானி வெளியேறினார். அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்து அமைச்சர் பதவியை இழந்தார். இதனை அடுத்து அவர் அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து இன்று வெளியேறினார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுலை வீழ்த்திய அவர், 2024இல் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

விராட் கோலி பாகிஸ்தானில் வந்து விளையாடினால் அவர் இந்திய விருந்தோம்பலை மறந்துவிடுவார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறியுள்ளார். பாகிஸ்தான் வீரர்களைக் காட்டிலும் விராட் கோலிக்கு பாக்.,கில் அதிக ரசிகர்கள் இருப்பதாகக் கூறிய அவர், கோலி பாகிஸ்தானில் விளையாடுவதைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர் என்றார். அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டுமென, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி இணைக்காவிட்டால் ரேஷன் பொருட்களை பெற முடியாது என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளும் ஆதாருடன் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என தமிழக அரசு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 10 மணி வரை ஈரோடு, சேலம், நாமக்கல், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

உணவு பாதுகாப்பு குறித்த அச்சம் உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், சீனாவில் நிலக்கரி எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரிகளை சுத்தம் செய்யாமல், சமையல் எண்ணெய்யை ஏற்றி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஹைட்ரோகார்பனை கொண்ட நிலக்கரி எண்ணெய்யை உட்கொள்வது ஆபத்தானது என உணவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அண்ணா பல்கலை. பதிவாளருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல்கலை. ஊழியர் மது என்பவரின் ஓய்வூதியம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு உடனடி நிவாரணம் அளிக்க பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

சேமிக்கும் பழக்கம் சிறந்த தூக்கத்திற்கு பங்களிப்பதாக, சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி, சேமிப்புக்காக மாதாந்திரத் தொகையை ஒதுக்குவது, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க உதவுவதாக தெரியவந்துள்ளது. குறைந்த சம்பளத்திலும் சேமிப்பு பழக்கம் கொண்டவர்கள், அதிக சம்பளம் வாங்குபவர்களை விட திருப்தியான வாழ்க்கையை வாழ்வதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு உலக நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான், வரும் 27ஆம் தேதி மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். அதற்காக மலேசியா சென்றுள்ள அவர், மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசியுள்ளார். அந்த படங்களை X தளத்தில் பகிர்ந்துள்ள அவர், அந்த சந்திப்பில் இசை, கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பம் குறித்து உரையாடியதாக தெரிவித்துள்ளார்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற பழமொழியை மெய்யாக்கும் வகையில் சிரிப்பதை ஜப்பான் நாடு கட்டாயமாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டில் யமகாட்டா மாகாணத்தில், பொதுமக்கள் நாளொன்றுக்கு ஒருமுறையாவது வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சிரிப்பதும், சிரிக்காமல் இருப்பதும் மனிதர்களின் அடிப்படை உரிமை என்று, இந்த சட்டத்திற்கு அந்நாட்டின் எல்டிபி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.