News March 19, 2024

CSK பயற்சி ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு அனுமதி

image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தை காண, ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதற்காக, கடந்த வாரம் சென்னை சேப்பாக்கத்திற்கு வந்த CSK அணி, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகள் பலருக்கும் கிடைக்காததால், இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

image

மக்களவைத் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும். மார்ச் 20 – மார்ச்27ஆம் தேதி வரை காலை 11 – பிற்பகல் 3 மணி வரை மனுத்தாக்கல் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

News March 19, 2024

நாளை முதல் வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை காலை 11 மணிக்கு தமிழகத்தில் தொடங்குகிறது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழகத்தின் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் நாளை முதலே தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய 27 கடைசி நாளாகும்.

News March 19, 2024

பங்குச் சந்தைகள் கடும் சரிவு

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவினை சந்தித்திருக்கின்றன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 238 புள்ளிகளை இழந்து 21,817 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 736 புள்ளிகளை இழந்து 72,012 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அன்னிய நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதே வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

News March 19, 2024

கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன்

image

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2011ல் உள்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்த போது, 263 சீனர்களுக்கு விசா அளிக்கப்பட்டதில் மோசடி நடந்ததாக E.D. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் E.D. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, ஏப்.5ல் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

News March 19, 2024

RCB அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

image

2024 ஐபிஎல் தொடருக்கான புது ஜெர்சியை பெங்களூரு அணி வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற ‘RCB Unbox’ நிகழ்ச்சியில், RCB அணியினர் தங்களது புதிய ஜெர்சியினை அணிந்து வந்தனர். இம்முறை சிவப்பு மற்றும் நீல நிற காம்பினேஷனில் ஜெர்சி உருவாகியுள்ளது. மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னையை எதிர்கொள்ள உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஜெர்சி எப்படி இருக்கு?

News March 19, 2024

பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

ஊட்டியில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தனியார் பள்ளிகளுக்கு அண்மையில் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் நிலையில், ஊட்டியில் 2 சர்வதேச பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

News March 19, 2024

திமுக கூட்டணிக்கு 3 கட்சிகள் ஆதரவு

image

மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மமக உள்பட 3 கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மற்றும் சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

News March 19, 2024

IPL-இல் ‘ஸ்மார்ட் ரீபிளே’ சிஸ்டம் அறிமுகம்

image

2024 ஐபிஎல் தொடரில், ‘ஸ்மார்ட் ரீபிளே’ சிஸ்டம் (Smart Replay System) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 3ஆவது நடுவரை துல்லியமாகவும் வேகமாகவும் முடிவெடுக்க உதவும். போட்டியில் ரிவியூ கேட்கும் போது, 3ஆவது நடுவர் அவுட்டா? இல்லையா? என்று பொறுமையாக பார்த்து சொல்ல வேண்டும். அதற்கு அதிக நேரம் எடுப்பதால், இந்த புது வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புகைப்படத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்க முடியும்.

News March 19, 2024

இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும்

image

நாட்டில் தற்போதுள்ள இடஒதுக்கீடு உச்சவரம்பான 50% நீக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளது.. சமூக, பொருளாதார, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்கு ஜி.எஸ்.டி விலக்கு, 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி ஆகிய அம்சங்கள் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளன.

error: Content is protected !!