India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் ஆகஸ்ட் 2இல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் கடைசி சில படங்கள் வரவேற்பை பெறாத நிலையில், ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கண்ணொளி காப்போம்” திட்டத்தின் கீழ், 2.70 லட்சம் மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6-12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 42.5 லட்சம் பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் கண் பார்வை குறைபாடு உடைய 2.70 லட்சம் பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பக்தர்களுக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் டிடிஎஃப் வாசன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் சாமி தரிசன வரிசையில், பிராங்க் வீடியோ எடுத்து டிடிஎஃப் வாசன் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த வீடியோ வைரலான நிலையில், தேவஸ்தானம் இது தொடர்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார். டெஸ்டில் 6,000+ ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் எடுத்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். கேரி சோபர்ஸ் (8,032 ரன்கள் & 235 விக்கெட்), ஜாக் காலிஸ் (13,289 & 292) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

அஸ்வகந்தா பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. அஸ்வகந்தா லேசான மயக்க மருந்து பண்புகளை கொண்டு உள்ளதால் இது தூக்கத்தை ஊக்குவிக்கிறது. இந்த மூலிகையை பாலுடன் சேர்த்து நாம் பருகும் போது நமது நரம்புகள் அமைதி படுத்தப்பட்டு, நல்ல தூக்கம் கிடைக்கும். இதனால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுகிறது. அதிகம் சேர்க்காமல் குறிப்பிட்ட அளவு பயன்படுத்துவது நலம் பயக்கும்.

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி மீது, உதயநிதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, திமுக கவுன்சிலர்கள் வழங்கிய கடிதத்தில், மக்கள் பணிகளை சரிவர மேற்கொள்ளாததால், உடனே அவரை ராஜினாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்கள் ராஜினாமா செய்த நிலையில், இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி சர்வதேச மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலைக் காணலாம். 1 இந்தியா (144.17கோடி) 2. சீனா (142.51கோடி) 3.அமெரிக்கா (34.15கோடி) 4. இந்தோனேசியா (27.97கோடி) 5.பாகிஸ்தான் (24.52கோடி) 6.நைஜீரியா (22.91கோடி) 7.பிரேசில் (21.76கோடி) 8.வங்கதேசம் (17.47கோடி) 9.ரஷ்யா (14.39கோடி) 10.எத்தியோப்பியா (12.97கோடி)

தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிப்பவரா நீங்கள்? அப்படியானால், “7 நாள்கள்” விதியை பயன்படுத்தும்படி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது, பெரும்பாலும் பொருட்களை நாம் விரைவான முடிவுகளின் அடிப்படையில் வாங்குகிறோம். இதை கட்டுப்படுத்த எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும், 7 நாள்கள் தள்ளிப்போட வேண்டும். இந்த கால இடைவெளி அவசியமான செலவுகளை நோக்கி நகர்த்துவதால், தேவையில்லாத பொருட்களை வாங்குவது குறையும்.

அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ஆம் தேதி, கைதான அவர், தற்போது திஹார் சிறையில் உள்ளது. முன்னதாக இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைத்த நிலையில், டெல்லி ஐகோர்ட் இடைக்கால தடை விதித்ததால் தற்போது அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்டில் 400 ரன்கள் என்ற தனது சாதனையை ஜெய்ஸ்வால் மற்றும் கில் முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக லாரா தெரிவித்துள்ளார். அதிரடியாக விளையாடும் இருவருக்கும் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா கடந்த 2004இல் இங்கி., அணிக்கு எதிராக 400 ரன்கள் எடுத்த சாதனையை இன்றளவும் யாராலும் முறியடிக்க முடியவில்லை.
Sorry, no posts matched your criteria.