India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிஹாரில் மஹிசி மற்றும் நவ்ஹட்டா கிராமங்களை இணைக்கும் பாலம் இடிந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 வாரங்களில் இடிந்து விழுந்த 13ஆவது பாலம் இதுவாகும். இந்த விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அம்மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களில் இதுவரை 15 பொறியாளர்களை மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

பாலில் கால்சியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அதை அதிகமாக குடிப்பது உடலுக்கு பல பிரச்னைகளை உண்டாக்கும். அதேநேரம், பாலை தொடர்ந்து ஒரு மாதம் குடிக்காமல் இருந்தால், வயிறு உப்புசம் அடைந்து, வாயுத் தொல்லை ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாலில் புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் அதை திடீரென நிறுத்தும் பொழுது வைட்டமின் D குறைபாடு ஏற்படுவதைக் காணலாம்.

விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட உள்ளதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அந்தக் குழு, நாடு முழுவதும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், இந்த முறை தங்களது போராட்டம் வேறு மாதிரியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

நடிகை வரலட்சுமிக்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோல் சச்தேவ் என்பவருடன் தாய்லாந்தில் நேற்று திருமணம் முடிந்துள்ளது. இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கடந்த வாரம் சென்னையில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மற்றும் வரவேற்பு நடைபெற்றது. அதில் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் தற்போது தாய்லாந்தில் திருமணம் நடந்துள்ளது.

டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணி வெற்றி பெற சேலம் அணி 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலில் ஆடிய சேலம் அணி, 19.2 ஓவரில் 141/10 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விவேக் அதிகபட்சமாக 23, சுஜித் சந்திரன் 20 ரன்களும் எடுத்தனர். நெல்லை அணியின் சோனு யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். நெல்லை அணி 142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வருகிறது.

நம் உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால் பல்வேறு பிரச்னைகள் வரும். சில சமயங்களில் காலையில் எழுந்த உடன் தலைசுற்றல் அல்லது கண்முன் இருட்டாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதன் பொருள் உங்கள் ரத்த அழுத்தம் குறைவாக உள்ளது அல்லது உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது. இதைத் தவிர்க்க, உலர் திராட்சை, கீரைகள், பீட்ரூட், முட்டை உள்ளிட்ட ரத்த அளவை அதிகரிக்க
உதவும் உணவுகளை சாப்பிடலாம்.

கனடா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ரிக்டர் அளவு கோலில் 6.5ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக குடியிருப்பு கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். டோஃபினோ என்ற பகுதியிலிருந்து 130 மைல் தொலைவில் உருவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

கத்தாருக்கு செல்லும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவின் தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) QR குறியீட்டை பயன்படுத்தி வளைகுடா நாடு முழுவதும் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள மிகப்பெரிய நிதி நிறுவனமான QNB உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஏராளமான இந்திய சுற்றுலா பயணிகள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கில் கைதான சாட்டை துரைமுருகனை, நீதிமன்றக் காவலில் அனுப்ப திருச்சி நீதிமன்றம் மறுத்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் NTK சார்பில் பிரசாரம் செய்த சாட்டை துரைமுருகன், கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், அவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார்.

வயதான பெற்றோர்களை கவனிக்க அசாம் அரசு ஊழியர்களுக்கு 2 நாள் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நவம்பர் மாதம் வழங்கப்படும் எனவும், பெற்றோர் அல்லது மாமனார், மாமியார் இல்லாதவர்களுக்கு இந்த விடுப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், அத்தியாவசிய பணியாளர்கள் படிப்படியாக இந்த விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.