India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்கும் வாய்ப்பு சுத்தமாக இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் போதுமான நீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும், தமிழகத்திற்கு நீர் திறக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு இன்று முதல் ஜூலை 30 தேதி வரை, தினமும் 1 டிஎம்சி திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே.ரகுராம கிருஷ்ண ராஜுவின் புகாரை தொடர்ந்து, ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தான் கைது செய்யப்பட்ட போது துன்புறுத்தப்பட்டதாகவும், அதற்கு ஜெகனும், அதிகாரிகளும் சதித்திட்டம் தீட்டியதாகவும் அந்த புகாரில் எம்எல்ஏ ரகுராம கிருஷ்ண ராஜு தெரிவித்துள்ளார்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 996 புள்ளிகள் அதிகரித்து 80,893 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வர்த்தக நேரம் முடிவில் சென்செக்ஸ் 622 புள்ளிகள் அதிகரித்து 80,519 புள்ளிகளிலும், நிஃப்டி 186 புள்ளிகள் அதிகரித்து 24,502 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. டிசிஎஸ் பங்கு 6.6%, இன்போசிஸ் பங்கு 3.5%, எச்.சி.எல்.டெக், டெக் மகிந்திரா பங்குகள் தலா 3% விலை உயர்ந்தது விற்பனையானது. –

தமிழக அரசின் மதுவிலக்கு சட்டத்திருத்தத்திற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்றால், ஆயுள் தண்டனையுடன் ₹10 லட்சம்
வரை அபராதமும் விதிக்கப்படும். இக்குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 66 பேர் பலியானதை அடுத்து, அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.

அரசுக்கு எதிராக பேசுபவர்கள், ஹிட்லர் பாணியில் கைது செய்யப்படுவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதை கலாச்சாரம் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், இதை தடுக்க அக்கறை காட்டாமல், தங்களை விமர்சிப்பவர்களை கைது செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது என்றார். முன்னதாக, அவதூறு வழக்கில் சாட்டை துரைமுருகன் நேற்று கைதாகி விடுவிக்கப்பட்டார்.

WI அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ENG அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் WI அணி 121 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து விளையாடிய ENG அணி 371 ரன்கள் எடுத்தது. ஃபாலோ ஆன் பெற்று, 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய WI அணி, 136 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் குடாகேஷ் மோட்டி அதிகபட்சமாக 31* ரன்கள் எடுத்தார்.

ஆந்திராவில் 8 வயது சிறுமியை, 6-7ஆம் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஆழமான அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இளவயதினர் பல்வேறு காரணங்களால் கெட்டுப்போய்விட்டதாகவும், நமது கலாசாரத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து உணர்த்தவும் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்மிருதி இரானியை அவமானப்படுத்தும் விதமான கருத்துகளை ஏற்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிறரை அவமானப்படுத்துவது பலவீனத்தின் அடையாளம் என்று தெரிவித்துள்ள அவர், ஸ்மிருதி இரானி குறித்தோ வேறு தலைவர்கள் குறித்தோ, இழிவான முறையில் யாரும் விமர்சிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். அமேதியில் ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸார் அவரை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நெருக்கடி காலத்தில் எந்த தவறும் இன்றி, லட்சக்கணக்கான மக்கள் சிறைக்கு சென்றதாகவும், இதை நினைவுபடுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இத்தினம் கடைபிடிக்கப்படும் எனவும் அமித்ஷா அறிவித்துள்ளார்.

பாக்.,கில் 2025இல் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி பங்கேற்காவிட்டால், அதற்கு பதிலாக எந்த அணி பங்கேற்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2023 உலகக் கோப்பை புள்ளிகள் அடிப்படையில், முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. ஒருவேளை பாகிஸ்தான் செல்ல இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தால், 9ஆவது இடத்தில் உள்ள இலங்கை, போட்டியில் விளையாட தகுதி பெறும்.
Sorry, no posts matched your criteria.