India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூட்டணி கட்சிகளுடன் பாஜக இன்று தொகுதி உடன்பாடு மேற்கொள்கிறது. தமிழகத்தில் ஏறக்குறைய கூட்டணியை பாஜக நிறைவு செய்ததாக தெரிகிறது. பாமக, அமமுக, தமாகா, ஓபிஎஸ் அணி, புதிய நீதி கட்சி, தமமுக, ஐஜேகே ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்று உடன்பாடு எட்டப்படும் என கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்தனர். இதையடுத்து, முழுமையாக தயாரான தேர்தல் அறிக்கை கனிமொழி தலைமையில் இன்று வெளியிடப்படுகிறது.
‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் எனப் பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்க லகந்த பானகத்தை (சீரகம், கருப்பட்டி கலந்த நீர்) கோயிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு படைத்து, சக பக்தர்களுக்கு கொடுக்க திருஷ்டி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
தமிழக அரசில் 2,553 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: MBBS. வயது வரம்பு: 22-37. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15. தேர்வு: எழுத்து தேர்வு. ஊதிய வரம்பு: ₹56,100-₹1,77,500/-. கூடுதல் தகவல்களுக்கு <
தமிழகத்தில் மக்களவை மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் 27ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் பெறப்படும். 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மார்ச் 30ஆம் தேதி மனுக்களை பெற கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் , உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் ஷோபா, ‘என்னுடைய கருத்து தமிழர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய முந்தைய கருத்தையும் திரும்ப பெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
➤தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. ➤ பெங்களூரு குண்டுவெடிப்பை தமிழர்களுடன் தொடர்புபடுத்தி பேசியதற்காக மன்னிப்பு கோரினார் ஷோபா கரந்த்லாஜே ➤ திமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை இன்று காலை 10 மணிக்கு ஸ்டாலின் வெளியிடுகிறார் ➤ கிரிக்கெட்டில் சச்சினை விட கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து புகழாரம்
மக்களவைத் தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டன. வேட்புமனு இன்று தொடங்கும் நிலையில், அதிமுக மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தையை இன்னும் நிறைவு செய்யவில்லை. நேற்று பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், தேமுதிகவை எப்படியாவது தக்கவைக்க அதிமுக விரும்புகிறது. இன்று அல்லது நாளைக்குள் அதிமுக கூட்டணி நிலைப்பாட்டோடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கையையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.
அடிக்கடி தவறு செய்யுங்கள். ஆனால் செய்த தவறையே அடிக்கடி செய்ய கூடாதென இளம் தொழில்முனைவோருக்கு OYO சி.இ.ஓ ரிதேஷ் அகர்வால் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில், ‘எந்த பின்புலமும் இல்லாமல் தொழில் தொடங்கிய எனது அனுபவத்திலிருந்து இளம் தொழில்முனைவோர் விரைவாக கற்றுக்கொள்ள முடியும். ஸ்டார்ட் அப் சமூகத்திற்கு மேலும் பலவற்றைக் கொடுப்பதில் எப்போதும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், வடசென்னை, தென்சென்னை, கோவை, நீலகிரி, பெரம்பலூர் உள்ளிட்ட 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. மேலும், மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.