India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாளை (ஜூலை 9) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. அதில், தமிழகத்திலும் ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால், அத்தியாவசிய பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இரவுக்குள் வெளியாகுமா?
அரசு தனக்கு கொடுத்த வேலை, வீட்டு மனை பட்டாவில் திருப்தி இல்லை என காவல்நிலையத்தில் மரணமடைந்த அஜித் குமாரின் தம்பி நவீன் தெரிவித்துள்ளார். தான் இருக்கும் இடத்தில் இருந்து 80 கி.மீ. தூரத்துக்கு அப்பால், அரசுப் பணி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக நவீன் தெரிவித்துள்ளார். அதேபோல் காட்டுப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாத இடத்தில் பட்டா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உ.பி.,யில், 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த அனுராதா(35), தாந்தரீகம் செய்யும் சந்துவின் உதவியை நாடியுள்ளார். சந்துவோ அனுராதாவுக்கு பேய் ஓட்ட வேண்டும் எனக் கூறி, உதவியாளர்களுடன் சேர்ந்து அவரது கழுத்தை அழுத்தி, வலுக்கட்டாயமாக வாயை திறந்து கழிவுநீரை குடிக்க வைத்துள்ளார். இதில் உடல்நலம் மோசமடைந்த அனுராதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்னும் மூடநம்பிக்கைகளில் சிக்கி இருப்பவர்களை என்ன செய்வது?
சர்வதேச கிரிக்கெட்டில் பிரபலமான அம்பயர் பிஸ்மில்லா ஜன் ஷின்வாரி (41) காலமானார். தீவிர உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக ஆப்கன் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இவரது மரணத்துக்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் 24 ODIs, 21 T20Is உள்பட 60-க்கு மேற்பட்ட போட்டிகளில் அம்பயராக, டிவி அம்பயராக செயல்பட்டுள்ளார். RIP!
நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றால் ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார். ‘நோ ஒர்க்- நோ பே’ என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்து <<16987412>>நாளை நாடு தழுவிய போராட்டம்<<>> அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக கூட்ட மேடையில் அவரது மூத்த மகள் காந்திமதி இருந்தது பேசுபொருளாகியுள்ளது. இவரது மகன் ப்ரீத்திவனே அன்புமணியின் மருமகன். இதனால் ப்ரீத்திவனுக்கு கட்சியில் கை ஓங்குவதாகத் தெரிந்தது. இதனாலேயே காந்திமதியின் மற்றொரு மகன் முகுந்தன் தாத்தா மூலம் கட்சியினுள் நுழைய முற்பட்டார். இதில்தான் அப்பா – மகன் இடையே பொதுவெளியில் ஏற்பட்ட மோதல் இன்னும் முற்றுப்பெறாமல் உள்ளது.
கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், விபத்து நடந்த பகுதியில் சுரங்கப் பாதை அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடுமாம், வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாம். உங்க ஊரில் மழை பெய்யுதா?
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஜூலை 21-ல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் கஸ்டடியில் அஜித் குமார் கொல்லப்பட்ட சம்பவத்தின் விசாரணை வேகமெடுத்துள்ளது. நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணை அறிக்கையை மதுரை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ளார். 20-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை, சம்பவம் இடம், போலீஸ் நிலையத்தில் ஆய்வு என நீதிபதி அதிரடி காட்டி இருந்தார். விசாரணை அறிக்கை விவரங்கள் வெளியானால் மேலும் பல உண்மைகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.