India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தால் திமுக மீது திருமாவளவன் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் அவரை அதிமுக கூட்டணியில் கொண்டு வரும் முயற்சியை இபிஎஸ் தொடங்கி இருப்பதாகவும், சில தலித் சமூகத் தலைவர்கள் மூலம் அவருடன் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் 6 பொது தொகுதிகள் உள்பட 12 தொகுதிகள் தருவதாக இபிஎஸ் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே மாதன்-அஸ்ரித் நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் அதிகாலையில் சென்று கொண்டிருந்தன. அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக திரிசுலி ஆற்றில் வெள்ளப் பெருக்கும், திடீர் நிலச்சரிவும் நேரிட்டது. இதில் வெள்ளப் பெருக்கில் சாலையில் சென்ற 2 பேருந்துகளும் அடித்து செல்லப்பட்டன. அவற்றில் பயணித்த 3 பேர் மட்டும் குதித்து தப்பினர். தகவலின்பேரில் 63 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

உலக நாடுகள் பல்வேறு பெயர்களில் கரன்சிகளை பயன்படுத்துகின்றன. இந்த கரன்சிகளில் எது அதிக மதிப்புடையது என கேள்வி எழுவதுண்டு. அதற்கான விடையை தெரிந்து கொள்வோம். குவைத் தினார்தான் அதிக மதிப்புடைய கரன்சியாகும். இந்திய ரூபாய் மதிப்பில் ₹271 என்பது ஒரு தினாருக்கு சமமாகும். அதன் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு, பெட்ரோலியப் பொருள் ஏற்றுமதியில் குவைத் மிகப்பெரும் சக்தியாக இருப்பதும் ஒரு காரணமாகும்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கண்டனம் தெரிவித்து பா. ரஞ்சித் பதிவிட்டிருந்தார். அதில் அவர், ஆட்சியிலிருந்தும் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் அடக்கம் செய்ய திமுக உதவவில்லை, வாக்கு வங்கி அரசியல்தான் திமுகவின் சமூக நீதியா என பல கேள்விகளை எழுப்பியிருந்தார். திமுக ஆதரவாளராக இயக்குநர் பா.ரஞ்சித் அறியப்பட்டுவந்த நிலையில், அவரது இந்த பதிவு அக்கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பானிபூரியில் ஊற்றப்படும் புதினா ரசத்தில் புற்றுநோய் உருவாக்கும் பச்சை நிறமி சேர்க்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், பானிபூரி, தெருவோர உணவகங்களுக்கு மருத்துவ, பதிவு சான்று கட்டாயம் என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத்துறைகளில் உள்ள 90 தோராய காலியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு கடந்த மார்ச் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (ஜூலை 13) முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வர்கள் 9.00 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷான் மசூத் நீடிப்பார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் கேப்டனாக செயல்படுவார். அதேநேரம், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் அறிவிப்பை வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. பாபர் அசாம் மீது விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில் அவர் கேப்டனாக அறிவிக்கப்படவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது அவர், நீட் தேர்வு ரத்து, குற்றவியல் சட்டங்களை சீரமைப்பது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவை குறித்த கோரிக்கை மனுவினை முதல்வரிடம் அளித்தார். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை துரிதப்படுத்தவும் முதல்வரிடம் அவர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்வோர், ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய ஆன்லைனில் கடைபிடிக்கப்படும் முறையை தெரிந்து கொள்வோம். www.pdsportal.nic.in என்ற இணையதளம் சென்று, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ PDS போர்ட்டலில் நுழைய வேண்டும். இந்த இணைதளத்தில் உள்ள முகப்புப் பக்கத்தின் மேல் இடது பக்கத்தில் உள்ள ‘மாநில அரசு இணையதளங்கள்’ (‘State Government Portals’) என்ற பகுதியை அழுத்த வேண்டும்.

இதையடுத்து திறக்கப்படும் பக்கத்தில் எந்த மாநிலம் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்தால், சம்பந்தப்பட்ட மாநில இணையதளம் செல்லும். அப்போது, ரேஷன் கார்டு முகவரி மாற்ற படிவம்’ அல்லது ‘ரேஷன் கார்டு படிவத்தில் மாற்றம்’ தொடர்பான பகுதியை தேர்வு செய்து யூசர் ஐடி, கடவுச்சொல் உருவாக்க வேண்டும். அதை பயன்படுத்தி உள்ளே சென்று தேவையான விவரங்களை நிரப்பி சமர்ப்பித்தால், அது சரிபார்க்கப்பட்டு முகவரி மாற்றப்படும்.
Sorry, no posts matched your criteria.