India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆர்சிபி அணியின் வைஷாக் விஜய்குமார் மிகச் சிறப்பாக பவுலிங் செய்வதாக இந்திய வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தமிழ்நாடு-கர்நாடகா அணிகளுக்கு ரஞ்சி போட்டியில், வைஷாக் விஜய்குமார் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உயிரை கொடுத்து விளையாடு வீரராக அவர் தெரிகிறார். அவருக்கு ஐபிஎல் போட்டி அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிக்கும் 26ஆவது படத்தின் OTT உரிமத்தை, அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நலன் குமாரசாமி இயக்கும் இந்தப் படத்திற்கு, ‘வா வாத்தியாரே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தருமபுரி திமுக வேட்பாளர் மணிக்கு, தொகுதியின் தற்போதைய எம்.பி செந்தில் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் குமார் வீழ்த்தியிருந்தார். இந்த முறை அவருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் வெற்றி பெற அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை எதிர்த்து போட்டியிட உள்ளார். 2019 தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமாரிடம் 1,20,767 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
கடும் பசி இருக்கும் நேரங்களில் பலர் தெரியாத திருமண வீடுகளில் சாப்பிடுவது உண்டு. வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு சத்தமில்லாமல் செல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி செல்லும்போது பிடிபட்டால் சிலர் கண்டித்து அனுப்புவார்கள். ஆனால், இப்படி நடந்துகொள்பவர்கள் மீது புகார் பதிவானால் IPC பிரிவு 441 ‘கிரிமினல் அத்துமீறல்’ சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் சிறை/ ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மும்பை அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா அந்த அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் நியமனத்தை ஜஸ்பிரித் பும்ரா முழு மனதுடன் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. மும்பை அணியில் எழுந்துள்ள கோஷ்டி பூசல் காரணமாகவே அவர், பயிற்சியில் பங்கேற்காமல் அகமதாபாத்தில் நடக்கும் போட்டியில் நேரடியாக இணைவதாக தெரிவித்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதைத் தொடர்ந்து, மார்ச் 22ல் அதிமுக தேர்தல் அறிக்கையும், இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை நாளைக்குள் அதிமுக நிறைவு செய்ய உள்ளதாக தெரிகிறது.
அண்மையில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த ‘சைத்தான்’ பட நடிகை அருந்ததி நாயர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அருந்ததியின் சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டும் கோலிவுட்டில் இருந்து யாரும் உதவ முன்வரவில்லை என அருந்ததியின் தோழியும், மலையாள நடிகையுமான ரம்யா கண்ணீர் மல்க கூறியுள்ளார். அருந்ததிக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 23ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 -3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் மதுரை அருகே மருத்துவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீன்கோரி திவாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, சாட்சிகளை கலைக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.