India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிக இடங்களில் போட்டியிடுவதை காட்டிலும் எத்தனை இடங்களில் வெல்வோம் என்பதே முக்கியம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் 2 இடங்களில் அமமுக போட்டியிடுகிறது. இது தொடர்பாக பேசிய அவர், “எங்களுக்கு அதிக இடங்கள் தருவதாக கூறினார்கள். ஆனால், கூட்டணிக்கு அதிக கட்சிகள் வந்ததால் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒரு இடம் கொடுத்தால் கூட போதும் என்று பாஜகவிடம் முன்பே கூறிவிட்டேன்” என்றார்.
ஐபிஎல் தொடருக்கான 2ஆவது புதிய ஜெர்சியை பெங்களூரு அணி வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும், 2 வெவ்வேறு நிற ஜெர்சிகள் அணிவதை RCB அணி வழக்கமாக கொண்டுள்ளது. 2024 ஐபிஎல் தொடருக்கான பிரதான (சிவப்பு) ஜெர்சியை நேற்று அறிமுகம் செய்த RCB அணி, இன்று பச்சை நிறம் கொண்ட 2ஆவது ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. பெயர் மாற்றம், 2 புதிய ஜெர்சிகள் என புத்தம் புதிதாக களமிறங்குவதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும் என்று மோர்கன் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பொருளாதார வளர்ச்சி, வட்டி விகிதம் குறைப்புக்கான சாத்தியம், சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட்களில் அந்நிய முதலீடு 2% லாபம் பதிவு செய்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை மாற்றியுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் முக்கியமானப் போட்டித் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூலை 7இல் நடைபெற இருந்த முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 23இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 14 நாட்களுக்கு முன்பே தேர்வர்கள் தயாராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதன்படி, எஸ்டிபிஐ கட்சிக்கு அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற ED அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது, செந்தில் பாலாஜியின் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பலமுறை ஜாமின் கோரி மனு செய்த போதும் அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. அங்கித் திவாரிக்கு கொடுக்கப்பட்ட ஜாமினை முன்வைத்து, செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோர வாய்ப்புள்ளது.
ரஜினியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவான படத்தில் அவர் நடித்துள்ளார். அந்த படத்தின் அறிமுக விழாவில் தனுஷ் பேசுகையில், “இளையராஜா, ரஜினியின் வாழ்க்கை வரலாறு படங்களில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டேன். அதில் ஒன்று நடந்துள்ளது. இது மிகப்பெரிய கெளரவத்தை அளிக்கிறது. நான் இளையராஜாவின் பக்தன்” என்றார்.
பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகள் குறித்து பாஜக தலைவர்களுடன் கமலாலயத்தில் ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக போட்டியிடும் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், பாமக வருகையால் அது குறைந்துள்ளது. இதற்கிடையே, தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம் ₹1,229 கோடி வருவாய் ஈட்டியதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஏழைகளின் ரதம் என்று அழைக்கப்படும் ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் முன்பதிவு செய்துவிட்டு வெயிட்டிங் லிஸ்டில் இருந்தவர்கள் கேன்சல் செய்த டிக்கெட்டுகள் மூலம் ₹1,229 கோடி கிடைத்ததாக RTI-ல் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது.
பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக, வட மாவட்ட தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சேலம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் எண்ணத்தில் பாமக உள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில், பாஜக ஆட்சி அமைந்த பிறகு மத்திய அமைச்சர் பதவி கேட்கவும் பாமக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.