India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீட்டுக்கடனுக்கான வட்டியை பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா 15 புள்ளிகளை இந்த மாத இறுதிவரை குறைத்துள்ளது. அந்த வங்கி இதுவரை வீட்டுக்கடனுக்கு 8.45% வட்டி வசூலித்து வந்தது. அதனை 8.3%ஆக குறைத்துள்ளது. மேலும், சேவை கட்டணத்தையும் ரத்து செய்துள்ளது. முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎப்சி வீட்டுக்கடனுக்கு 8.4% வட்டி வசூலிக்கின்றன. அதனுடன் ஒப்பிடுகையில் இது 10 புள்ளிகள் குறைவாகும்.
பாஜக-தமாகா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிகளை இறுதி செய்ய ஜி.கே.வாசன், பாஜக அலுவலகம் சென்று அண்ணாமலை உள்ளிட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மீண்டும் பேசுவோம் எனக் கூறிவிட்டு வாசன் அங்கிருந்து சென்றுள்ளார். தமாகா 3 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், பாஜக 2 தொகுதிக்கு மேல் தர முடியாது என கூறுவதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கலை நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் (மார்ச் 22) நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. போட்டிக்கு முன்பு நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், சோனு நிகம், டைகர் ஷெராப் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதனால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இளையராஜா மீது எனக்கு பொறாமை இருந்ததே கிடையாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பயோபிக் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், ” எனக்கு இசை பெரிதாக வராது. அதனால், அவர் மேல் என்றும் பொறாமை இல்லை. எனக்கு வராதது எல்லாம் அவருக்கு வருகிறதே என்று ஆச்சரியமாகத்தான் பார்ப்பேன். அவருக்கு வரும் புகழையும் பல நேரம் நான் எனதாக்கி கொண்டு வருகிறேன். அவர் எங்கும் நிறைந்திருப்பார்” என்றார்.
மக்களவைத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கோரியிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்தத் தேர்தல்களில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒதுக்கப்படவில்லை. இதனால்
அந்தத் தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை. இந்நிலையில், தினகரன் அளித்துள்ள பேட்டியில், “குக்கர் சின்னம் கோரியுள்ளோம். தேர்தல் ஆணையத்தின் பதிலுக்கு காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி – பிரேமலதா ஆகியோர் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் விஜயகாந்த் இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்கும் பிரேமலதா, நினைத்ததை சாதித்ததாக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபராக 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு, புதினுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதின் பதவியேற்றுள்ளார். இதையடுத்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யப் போரை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டுமென்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் அவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர் தென்னிந்திய சினிமாவில் தான் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “முதன்முறையாக, மிகப்பெரிய தென்னிந்திய படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். பான் இந்தியா படமான இதன் படப்பிடிப்பு எங்கு நடக்க இருக்கிறது என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார். அது யாஷின் ‘டாக்ஸிக்’ படமாகத் தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
உதயநிதி தெரிவித்தது போல, திமுக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதா, இல்லையா என கேள்வி எழுந்துள்ளது. அக்கட்சியின் இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி, வேட்பாளர்கள் தேர்வில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தியிருந்தார். ஆனால், வேட்பாளர்கள் பட்டியலில் பெரும்பாலானோர் 40 வயதுக்கும் மேற்பட்டவர்களே. இதனால், அவர் கோரிக்கை ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்கு அம்மை நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சல், இருமல், மூக்கு மற்றும் கண்ணில் நீர் வடிதல், வேர்க்குரு, நீர் கட்டி, கொப்பளங்கள் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த நோய்களில் தர்கார்த்துக் கொள்ள, தண்ணீர், இளநீர், மோர், திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Sorry, no posts matched your criteria.