India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டிக்க விரும்புவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நீரின்றி குறுவை சாகுபடியை நிறைவு செய்ய முடியாத நிலையை கர்நாடக முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்துக்கு நீர் திறக்க உத்தரவிட்டதை அமல்படுத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்தது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்க தடை இல்லை என ஐகோர்ட் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்பவர், தாடி வைத்ததால் தனக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என தொடுத்த வழக்கில், இஸ்லாமியர்கள் தாடி வைத்துக்கொள்ள சட்டத்தில் அனுமதி உள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், ஊதிய உயர்வை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்ததுடன், 8 வாரங்களுக்குள் ஊதிய உயர்வு வழங்கவும் ஆணையிட்டார்.

தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை 29 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், வேலூர், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், திருச்சி, தென்காசி, திருப்பூர், மதுரை,தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சாதியை பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கு அடி விழும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். கோவா பாஜக செயற்குழுவில் பேசிய அவர், சாதி அடிப்படையிலான அரசியலை பின்பற்ற வேண்டாம் என தான் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செய்த தவறுகளை நாமும் செய்ய கூடாது என்ற அவர், காங்கிரஸுக்கு பதிலாக மாற்று அரசியலை எதிர்பார்க்கும் மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்றார்.

உலக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணி வீரர் உத்தப்பா சரவெடியாக வெடித்து வருகிறார். 21 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்த அவர் 31 பந்துகளில் 64* ரன்களுடன் ஆடி வருகிறார். இவரது அதிரடியால் இந்தியா 10 ஓவரில் 101/2 ரன்கள் எடுத்துள்ளது. ராயுடு 14, ரெய்னா 5 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் யுவராஜ் (15*) களத்தில் உள்ளார்.

68வது Filmfare சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகையாக சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி (கட்டா குஸ்தி), ஐஸ்வர்யா ராய் (PS-1), கீர்த்தி சுரேஷ் (சாணி காயிதம்), த்ரிஷா (PS-1), கோவை சரளா (செம்பி), சாய் பல்லவி (கார்கி), நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) ஆகியோர் நாமினேஷனில் இருந்த நிலையில், சாய் பல்லவி சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. நாளை காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி, 8 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமுக, பாமக, நாதக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகேஷ் அம்பானி தினமும் ₹3 கோடியை செலவு செய்தால், அவரது சொத்துக்கள் தீர 932 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சரியாக சொல்லப்போனால், முகேஷ் அம்பானியின் 12 தலைமுறைகள் எந்த வேலையும் செய்யாமல் தினசரி ₹3 கோடி செலவு செய்யலாம். ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, ₹10.25 லட்சம் கோடியாக உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற திருமாவளவன், முதல்வரை சந்தித்த பிறகு மாற்றி பேசுவதாக பாஜக நிர்வாகி பிரசாத் விமர்சித்துள்ளார். அநீதிக்கு எதிராக முதலில் குரல் கொடுத்து விட்டு, இறுதியில் ஆட்சி அதிகாரத்திடம் சரணடைவது திருமாவுக்கு வழக்கமானதுதான் என்றும் சாடியுள்ளார். தமிழகத்தில் வன்முறையை தூண்ட சிலர் முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பெற்றோரை குடும்ப உறுப்பினர்களாக சேர்ப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெற்றோரை குடும்ப உறுப்பினர்களாக சேர்க்காமல் விலக்கி வைத்தது சட்டவிரோதமானது; திருமணமானாலும் அரசு ஊழியரின் பெற்றோர் அவரின் பெற்றோராகவே நீடிப்பதால் காப்பீடு திட்ட பலனை மறுக்க முடியாது என்பதால், 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.