News July 13, 2024

அரிய வழக்குகளிலேயே ஜாமின் மீது இடைக்காலத் தடை

image

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் வழங்கப்பட்ட ஜாமினுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து குரானா என்பவர் மனு தொடுத்திருந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், தீவிரவாதம் போன்ற அரிய வழக்குகளிலேயே ஜாமின் மீது இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இயந்திர தனமாக தடை விதிப்பது தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, தீர்ப்பை ஒத்திவைத்தது.

News July 13, 2024

“ஜாமின் வழங்க வங்கி உத்தரவாதம் கோர முடியாது”

image

ரூ.1.1 கோடி கையாடல் வழக்கில் கைதான உத்சவ் என்பவருக்கு ரூ. 1 கோடி வங்கி உத்தரவாத அடிப்படையில் நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உத்சவ் தொடுத்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், வங்கி உத்தரவாதம் கோருவது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனடிப்படையில் வங்கி உத்தரவாதம் கோர முடியாது. அதற்குப் பதில் வேறு நிபந்தனைகளை விதிக்கலாம் என கூறியது.

News July 13, 2024

தபால் வாக்கில் திமுக முன்னிலை

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட தபால் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் மொத்தம் 798 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதில் 130 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சிவா முன்னிலை வகித்து வருகிறார்.

News July 13, 2024

7 மாநில இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை

image

தமிழ்நாடு, பிஹார், மேற்கு வங்கம் , மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலின் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 2024 மக்களவை தேர்தலுக்கு பின் நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

News July 13, 2024

விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

image

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில், திமுக அன்னியூர் சிவா, பாமக சி.அன்புமணி, நாதக அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில், 82.48% வாக்குகள் பதிவாகின. 2 மேஜைகளில் தபால் வாக்குகளும், 14 மேஜைகளில் மின்னணு இயந்திர வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

News July 13, 2024

கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய….

image

சமையல் கேஸ் இணைப்பு வழங்கும் நிறுவன அலுவலக எண்களையும், கட்டணமில்லா பொது எண்ணையும் தொடர்பு கொண்டும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். இதற்கு பாரத் கேஸ், இண்டேன், எச்.பி. ஆகியவை தனித்தனி எண்களை பராமரிக்கின்றன. கீழ்காணும் எண்களே அந்த எண்கள் ஆகும். இவற்றில் தொடர்பு கொண்டு கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் * பாரத் கேஸ் – 9486056789 * இண்டேன் கேஸ் – 7718955555 *எச்.பி. கேஸ் – 90922 23456

News July 13, 2024

₹95 திட்டத்தில் 4ஜிபி டேட்டா, இலவச OTT

image

கட்டண உயர்வை அமல்படுத்திய போதிலும், சில சலுகைகளையும் சந்ததாரர்களுக்கு வோடபோன் ஐடியா தொடர்ந்து அளிக்கிறது. மிக குறைந்த விலையில், ₹95 திட்டத்தில் 4 ஜிபி டேட்டா, sony Liv OTT இலவச சேவையை வழங்குகிறது. டேட்டாவுக்கான வேலிடிட்டி 14 நாள்களும், sony liv OTT வேலிடிட்டி 28 நாட்களும் அளிக்கப்பட்டுள்ளன. இலவசமாக OTT பார்க்க விரும்புவோருக்கு இதுசிறந்த திட்டம் எனக் கூறப்படுகிறது.

News July 13, 2024

குடும்பத்துடன் நேரம் செலவிட வாழ்த்துகள்: சச்சின்

image

இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகள் கூறியுள்ளார். அவருடைய பந்துவீச்சின் வேகமும், இலக்கை அடையும் துல்லியமும் பல தலைமுறைகளை உத்வேகப்படுத்தியதாக சச்சின் கூறியுள்ளார். மேலும், 22 ஆண்டுகள் அசாத்திய பந்துவீச்சாளருக்கு சிறிய பிரியாவிடை என வாழ்த்தியுள்ளார்.

News July 13, 2024

பலத்த மழையால் விமான சேவை பாதிப்பு

image

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 16 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், சூறைக்காற்று வீசியதால் தரையிறங்க வேண்டிய 4 விமானங்களும் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. 15க்கும் மேற்பட்ட விமானங்கள் வானில் வட்டமடித்தன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

News July 13, 2024

12 மாவட்டங்களில் மழை கொட்டும்

image

தமிழகத்தில் காலை 9.30 வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.

error: Content is protected !!