News July 13, 2024

டிரம்பிற்கு நிதி அளித்த எலான் மஸ்க்

image

அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. டொனால்ட் டிரம்பிற்கும், ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், டிரம்பை தேர்ந்தெடுக்க தீவிரமாக வேலை செய்யும் America PAC குழுவிற்கு பெரும் தொழிலதிபர் எலான் மஸ்க் நிதியளித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. முன்பு தன்னை அரசியல் சார்பற்றவர் என கூறிய மஸ்க், தற்போது டிரம்பை அதிபராக்க நிதி அளித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.

News July 13, 2024

முதல் சுற்றில் திமுக முன்னிலை

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், முதல் சுற்றில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதன்படி, திமுக வேட்பாளர் – 8,564, பாமக வேட்பாளர் – 3,096, நாதக வேட்பாளர் – 438 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

News July 13, 2024

16 ஆண்டுகளில் 13 பிரதமர்களை கண்ட நேபாளம்

image

நேபாளத்தில் 2008இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, இதுவரை 16 ஆண்டுகளில் 13 பிரதமர்கள், பதவி வகித்துள்ளனர். பிரசண்டா மட்டும் 3 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார். 2008 முதல் 2009 வரை ஒருமுறையும், 2016- 2017 வரை 2ஆவது முறையும், 2022 முதல் 2024 வரை 3ஆவது முறையும் பதவி வகித்துள்ளார். புதிதாக ஆட்சியமைக்க கேபி சர்மா ஒலி உரிமை கோரியுள்ளார். அவர் பதவியேற்றால், 16 ஆண்டுகளில் 14ஆவது பிரதமராவார்.

News July 13, 2024

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

image

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2 வாரங்களாக குறைந்து வந்தது. சுமார் ₹14.198 ஆயிரம் கோடி (1.7 பில்லியன் டாலர்) வீழ்ச்சியடைந்து, ₹54.45 லட்சம் கோடியாக (652 பில்லியன் டாலர்) இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வார இறுதி நிலவரப்படி, அந்நிய செலாவணி கையிருப்பு ₹4,34,30 ஆயிரம் கோடி (5.2 பில்லியன் டாலர்) அதிகரித்து, ₹54.87 லட்சம் கோடியாக (657 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது.

News July 13, 2024

பாமக வேட்பாளர் முன்னிலை

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் சிவா முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து, தற்போது பாமக வேட்பாளர் அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார். திமுக, பாமக மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு நிறைந்து காணப்படுகிறது. முடிவுகளை உடனுக்குடன் WAY2NEWSல் தெரிந்துக்கொள்ளுங்கள்.

News July 13, 2024

அரிய வழக்குகளிலேயே ஜாமின் மீது இடைக்காலத் தடை

image

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் வழங்கப்பட்ட ஜாமினுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து குரானா என்பவர் மனு தொடுத்திருந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், தீவிரவாதம் போன்ற அரிய வழக்குகளிலேயே ஜாமின் மீது இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இயந்திர தனமாக தடை விதிப்பது தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, தீர்ப்பை ஒத்திவைத்தது.

News July 13, 2024

“ஜாமின் வழங்க வங்கி உத்தரவாதம் கோர முடியாது”

image

ரூ.1.1 கோடி கையாடல் வழக்கில் கைதான உத்சவ் என்பவருக்கு ரூ. 1 கோடி வங்கி உத்தரவாத அடிப்படையில் நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உத்சவ் தொடுத்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், வங்கி உத்தரவாதம் கோருவது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனடிப்படையில் வங்கி உத்தரவாதம் கோர முடியாது. அதற்குப் பதில் வேறு நிபந்தனைகளை விதிக்கலாம் என கூறியது.

News July 13, 2024

தபால் வாக்கில் திமுக முன்னிலை

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட தபால் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் மொத்தம் 798 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதில் 130 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சிவா முன்னிலை வகித்து வருகிறார்.

News July 13, 2024

7 மாநில இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை

image

தமிழ்நாடு, பிஹார், மேற்கு வங்கம் , மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலின் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 2024 மக்களவை தேர்தலுக்கு பின் நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

News July 13, 2024

விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

image

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில், திமுக அன்னியூர் சிவா, பாமக சி.அன்புமணி, நாதக அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில், 82.48% வாக்குகள் பதிவாகின. 2 மேஜைகளில் தபால் வாக்குகளும், 14 மேஜைகளில் மின்னணு இயந்திர வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

error: Content is protected !!