India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல நடிகரான கருணாஸ் 2016இல் முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து, அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, தினகரன் என ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்த அவர், தற்போது மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அவர் இணையலாம் என கருதப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. கடலூரில் முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து, மத்திய சென்னையில் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி (அ) மாவட்ட செயலாளர் பிரபாகரன், திருவள்ளூரில் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி, தஞ்சையில் டாக்டர் ராமநாதன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து தகவல் கசிந்துள்ளது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் தொகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தருமபுரி, சேலம், கடலூர், ஆரணி, அரக்கோணம், திருப்பெரும்புதூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
திமுகவை குறை கூறுவதற்கு அதிமுகவுக்கு தகுதி இல்லை என திமுக எம்.பி. கனிமொழி காட்டமாக கூறியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், “மக்களுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த அத்தனை மசோதாக்களையும் (மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதா எதிர்த்த மசோதாக்களை) ஆதரித்து அதிமுகவினர் வாக்களித்தனர். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து அதிமுக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை” என்றார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் ஆதரவு வழங்க உள்ளார். துரோக அதிமுகவை வீழ்த்த 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த அவர், பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அனைவரும் ஒரே குடையின் கீழ் அணியாக திரள வேண்டியுள்ளதாக கூறினார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தல் தீய சக்திக்கும், நல்ல சக்திக்குமான போர் என அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “வலிமையான கட்சி என்ற பிம்பத்தை பாஜக உருவாக்க பார்க்கிறது. தேர்தல் முடிவில் அது வெறும் மாயை என்பது தெரிய வரும். அதிமுகவை அமலாக்கத்துறையை வைத்து மிரட்டலாம் என நினைக்கிறார்கள். அதிமுக இதற்கெல்லாம் பயந்த கட்சி கிடையாது. எதையும் எதிர்த்து நிற்போம்” என்றார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. தவறான விளம்பரம் தொடர்பான அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்காததால், பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி எம்.டி. ஆச்சார்ய பாலகிருஷ்ணா நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணா சார்பில், மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜகவிடம் தஞ்சாவூர் தொகுதியை கேட்டு ஓபிஎஸ் & ஜி.கே.வாசன் அழுத்தம் தருவதால் கூட்டணியை இறுதி செய்ய பாஜக திணறி வருகிறது. ஓபிஎஸ் அணியில், வைத்திலிங்கம் தனது மகனுக்காக அந்த தொகுதியை பெற அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே போல் தனது சமூக வாக்குகள் அதிகம் உள்ள அத்தொகுதியை ஜி.கே.வாசனும் கேட்பதால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் பாஜக தலைமை குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெரும் நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டின் பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்று ஸ்ரீபெரும்புதூர். மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 திமுக வசமுள்ளன. இதுவரை இங்கு நடந்த 14 தேர்தல்களில் திமுக 8, காங். & அதிமுக தலா 3 முறை வென்றுள்ளன. 2019 தேர்தலில் T.R.பாலு 5,07,955 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
அரசியல் கட்சிகளின் அங்கீகாரமற்ற விளம்பரங்களை அகற்ற மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகாரை அடுத்து, அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில், அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.