India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற படங்களின் 2ஆம் பாகத்தை உருவாக்குவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக, சாமி, சந்திரமுகி, சண்டக்கோழி, சென்னை 600 028 ஆகிய படங்களின் 2ஆம் பாகம் தோல்வி படங்களாக அமைந்தன. அதே நேரம், முனி, அரண்மனை, எந்திரன் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளில் காங்., அபார வெற்றிபெற்றுள்ளது. இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழல் இருக்கும். ஆனால், அந்த நிலையை மாற்றி, பாஜகவை வீழ்த்தி காங்., வெற்றிபெற்றுள்ளது. அதேபோல், மேற்குவங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வசம் இருந்த 3 தொகுதிகள் உட்பட 4 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளரை தவிர, அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இந்நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு தேர்தல் அதிகாரி வெற்றிச் சான்றிதழை வழங்கினார். அப்போது, அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் உடனிருந்தனர்.

மனோஜ், குணால் நடிப்பில் “வருஷமெல்லாம் வசந்தம்” திரைப்படத்தை இயக்கிய ரவி ஷங்கர், நேற்றிரவு கே.கே.நகரில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பாக்யராஜ், விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல, இன்றும் மக்கள் மனதை கொள்ளையடிக்கும் ‘சூர்யவம்சம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ உள்ளிட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழரின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் 8,216 வாக்குகளும், 2024 மக்களவைத் தேர்தலில் ( விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும்) 8,353 வாக்குகள் பெற்றிருந்த நாதக, தற்போது இடைத்தேர்தலில் 10,602 வாக்குகள் பெற்றுள்ளது. நாதக டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்தாலும், கடந்த தேர்தல்களை விட 2000 வாக்குகள் கூடுதலாக பெற்று அசத்தியுள்ளது.

TNPL லீக் கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் மதுரை-திருப்பூர் அணிகள் மோதும் நிலையில், டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒரு வெற்றியுடன் மதுரை 7ஆவது இடத்திலும், வெற்றி எதுவும் பெறாமல் திருப்பூர் அணி கடைசி இடத்திலும் உள்ளன. இன்றையப் போட்டியில் எந்த அணி வெல்லும்?

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின்போது குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். தேர்தல் முடிவுக்குப் பிறகு அந்தத் தொகை திரும்ப கிடைக்க வேண்டும் என்றால், ஒரு தொகுதியில் பதிவாகும் மொத்த வாக்குகளில் 6இல் ஒரு பங்கு வாக்கை பெற வேண்டும். அவ்வாறு பெறாவிட்டால், அவர்களை டெபாசிட் இழந்த வேட்பாளர் என தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. நேற்று முதல் அமலாகியுள்ள இந்த திருத்தம் மூலம் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி சட்டத்துறை நியமனங்களுக்கும், விசாரணைக்கு உத்தரவிடுவதற்கும், நிராகரிப்பதற்கும் ஆளுநரின் ஒப்புதல் வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், சட்டத் திருத்தம் அமலாகியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,195 (63.01%) வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் அன்புமணி 56,026 (28.65%) வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்துள்ளார். 3ஆவது இடத்தில் நாதக வேட்பாளர் அபிநயா 10,479 (5.36%) பெற்று டெபாசிட் இழந்துள்ளார். இத்தேர்தலில், சுவாரஸ்யமாக 814 வாக்குகளுடன் NOTA 5ஆவது இடம் பெற்றுள்ளது.

பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக இருக்கிறது. இதற்கு அரசியல் விமர்சகர்கள் பல காரணங்களை முன் வைக்கின்றனர். ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும், அதுமட்டுமே வெற்றியை தேடித்தருவதில்லை என்கிறார்கள். மாறாக, ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெறும் போது, அரசின் திட்டங்கள் விரைந்து கிடைக்கும் என மக்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.