India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை ஜியோ சினிமா OTT தளம் இலவசமாக ஒளிபரப்பவுள்ளது. வழக்கமாக, சர்வதேச ரசிகர்களுக்காக எடிட் செய்யப்படும் காட்சிகள்தான் இந்தியாவிலும் ஒளிபரப்பாகும். ஆனால், இந்த முறை இந்திய வீரர்கள் விளையாடும் போட்டிகளுடன், எடிட் செய்யப்படும் பிரத்யேக காட்சிகள் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகவுள்ளன. இத்தொடர் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.

முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாக ராமதாஸ் தெரிவித்தார். பாமக வேட்பாளருக்கு 56,261 பேர் வாக்களித்திருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறிய அவர், பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது என்றும் சாடினார். உண்மையான வெற்றி தங்களுக்கே கிடைத்துள்ளது என்றும், 2026 தேர்தலில் பாமக வெற்றி பெறுவது உறுதி எனவும் அவர் சூளுரைத்தார்.

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2024-25 நிதியாண்டின் நிகர நேரடி வரி வருவாய் 19.54% அதிகரித்து, ₹5,74,357 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ₹4,80,458 கோடியாக இருந்தது. அதே நேரம், மொத்த நேரடி வரி வசூல் 23.24% அதிகரித்து, ₹5,23,563 கோடியிலிருந்து ₹6,45,259 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் கார்பரேட் வரி வசூல் ₹2,65,336 கோடியாகவும், தனிநபர் வரி வசூல் ₹3,61,862 கோடியாக உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாத சூழலில், அக்கட்சியினரின் வாக்குகள் யாருக்கு? என்ற கேள்வி எழுந்தது. அதிமுகவினர் தேர்தலை புறக்கணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை தேர்தலை போன்றே 82% வாக்குகள் பதிவானதால், அதிமுகவினர் வாக்களித்திருப்பது தெளிவாகிறது. அதே போல, அதிமுகவினர் பெரும்பாலானவர்கள் திமுகவிற்கு வாக்களித்திருப்பதையும் வாக்கு விகிதம் காட்டுகிறது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்தநாளன்று (ஜூலை 15) தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, காலை உணவுத் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் சூழலில், இந்தத் திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் குறித்து X பக்கத்தில் போலியான செய்தியை பதிவிட்டதாக பிரபல யூடியூபர் துருவ் ரதி மீது மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓம் பிர்லாவின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் கலந்து கொள்ளாமலேயே தேர்ச்சி பெற்றதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த போலி கணக்கு தன்னுடையதல்ல என ரதி மறுத்துள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் எடி மர்ஃபி, நடிகை பெய்ஜ் பட்ஜரை 2ஆவது திருமணம் செய்துள்ளார். இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்தநிலையில், 2016இல் மகளும், 2018இல் மகனும் பிறந்தனர். இந்நிலையில், கரிபீயன் தீவுகளில் 9ஆம் தேதி 2 பேரும் திருமணம் செய்தனர். பெய்ஜ்க்கு முன்பு, நடிகை நிக்கோல் மிஷெலை மர்ஃபி திருமணம் செய்திருந்தார். அவர்கள் இருவரும் 5 குழந்தைகள் இருந்த நிலையில் 2006இல் பிரிந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தின் மேற்கு ஜலந்தர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொஹிந்தர் பகத் 55,246 வாக்குகள் பெற்று, பாஜக வேட்பாளரை விட 37,325 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். பாஜக இரண்டாம் இடம் பிடித்த நிலையில், காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தின் முன்னணி கட்சியான அகாலிதளம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஜிம்பாப்வேக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார் இந்திய கேப்டன் ஷுப்மன் கில். 5 போட்டிகளை கொண்ட தொடரில் 2க்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய முன்னிலையில் உள்ளது. இந்திய அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக துஷார் தேஷ்பாண்டே தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் களம் இறங்குகிறார்.
Sorry, no posts matched your criteria.