India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடியின் நாடகங்கள் அனைத்தும் ஜூன் 4இல் முடிந்துவிடும் என்று சிவசேனா (UBT) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், “மோடி தான் பயன்படுத்தும் வார்த்தைகள் மூலம் பிரதமர் பதவியின் மதிப்பை குறைத்து வருகிறார். அவரால் நாட்டின் பெயரும் கெடுகிறது. பதஞ்சலி எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் கொண்டு ஓய்வெடுங்கள், நாட்டை நாசப்படுத்தாதீர்கள்” என பிரதமர் மோடியை சாடியுள்ளார்.
2025ஆம் நிதியாண்டில் 12,000 பேரை எஸ்பிஐ பணியமர்த்த உள்ளதாக அதன் தலைவர் தினேஷ் ஹாரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 11,000- 12,000 பேரை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளதாகவும், இதில் 10,000 பணியிடங்கள் இன்ஜினியரிங் பணியிடங்கள் என்றும் கூறினார். இதில் 85% பேர் புதியவர்கள் என்ற கூறிய ஹாரா, தொழில்நுட்ப திறன் கொண்டோருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஐபிஎல் தொடரின் 60ஆவது லீக் போட்டியில் இன்று மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில், மழை காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. இரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், 23 போட்டிகளில் MI அணியும், 10 போட்டிகளில் KKR அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
*செல்ஃபோனின் iOS பதிப்பை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். *ஐபோனை எப்போதும் சாதாரண வெப்பநிலையில் வைத்திருங்கள் (35°C க்கு மேல் வெப்பநிலை இருந்தால் பேட்டரி திறன் பாதிக்கும்). *ஃபோன் கேஸை அகற்றிவிட்டு, சார்ஜ் செய்யுங்கள். *சில நாள்களுக்கு போனை உபயோகிக்க விரும்பாதபோது, அதனை 50% சார்ஜிங்கில் வைப்பது நல்லது. *சார்ஜ் மிகவும் குறைவாக இருந்தால், லோ பவர் மோட்-ஐ ஆக்டிவேட் செய்யுங்கள்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை வம்புக்கு இழுக்கும் வகையில் இயக்குநர் அமீர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் புரொமோஷன் நிகழ்வில், “சாதிக்குக்கு இவ்வளவு பணம் எப்படி வந்ததென உங்களுக்கு சந்தேகமே வரவில்லையா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமீர், “இதே கேள்வியை லைகா நிறுவனத்தில் நடித்த விஜய், ரஜினியிடம் போய் கேட்பீங்களா?” என பதிலளித்துள்ளார்.
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம் ஆண்டு ராமஜெயமும் கொலை செய்யப்பட்டார். 2 சம்பவமும் ஒரே பாணியில் இருப்பதை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு, ஆண்டுதோறும் ₹1 லட்சம் வழங்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். தமிழர்களுக்கு இலக்கணமாக வாழ்ந்த விஜயகாந்துக்கு, முதல் பாராட்டு விழா டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இது மிகவும் பெருமைக்குரிய விஷயம் எனக் குறிப்பிட்ட பிரேமலதா, இனி ஆண்டுதோறும் விஜயகாந்த் பிறந்தநாளன்று டெல்லி தமிழ்ச் சங்கத்திற்கு தேமுதிக சார்பில் ₹1 லட்சம் வழங்கப்படும் என்றார்.
உத்தராகண்டில் பத்ரிநாத் பகுதியில் அலக்நாதா நதிக்கரையோரம் உள்ள கோயிலும் சார் தாம் யாத்திரையின் ஒரு அங்கம். இக்கோயில் தெய்வமாக விஷ்ணு உள்ளார். 8ஆம் நூற்றாண்டில் இக்கோயில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மந்தாகினி நதி அருகே உள்ள கேதார்நாத் கோயில், சிவபெருமானின் புண்ணியத் தலமாக கூறப்படுகிறது. இந்த 4 கோயில்களுக்கும் செல்லும் யாத்திரையே சார் தாம் எனப்படுகிறது.
கங்கோத்ரி கோயில், கடல் மட்டத்தில் இருந்து 3,200 மீட்டர் உயரத்தில் உத்தரகாசியில் கங்கை நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இக்கோயில் தெய்வமாக கங்கை மாதா உள்ளார். கங்கையில் புனித நீராடி இக்கோயிலில் வழிபட்டால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனால், இக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட பிரசாரம் ஓய்வடைந்தது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 3 கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை மறுநாள் 4ஆவது கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா, தெலங்கானா உள்பட 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 96 தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.