News March 29, 2024

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மீண்டும் மனு

image

இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்திட வேண்டும். அத்தகைய Specimenதான் ஏற்கெனவே ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனது கையெழுத்து இல்லாத மனுவை ஏற்பது சட்ட விரோதம்” என்று ஓபிஎஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

News March 29, 2024

குட்டித்தூக்கம் போடுவதில் இவ்வளவு நன்மைகளா?

image

அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு மதியம் சாப்பிட்டு முடித்தவுடன், லேசாக கண்ணை கட்டும். அப்போது குட்டித்தூக்கம் போடுவது பல நன்மைகளை அளிக்குமாம். குட்டித்தூக்கம் என்பது 10 முதல் 20 நிமிடங்களுக்கு மட்டுமே. இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். தேவையற்ற கவலை, பதற்றத்தை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, இதய நோய் அபாயத்தை குறைக்குமென சமீபத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

News March 29, 2024

அந்த சம்பவத்திற்கும் பள்ளிக்கும் சம்பந்தமில்லை

image

மோடியின் சாலை பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, கோவை தனியார் பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பள்ளி குழந்தைகள் சாலை பேரணியில் பங்கேற்றதற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கை ஏப்.3ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

News March 29, 2024

வாழ்க்கையின் முரண்பாடு இதுதானோ?

image

கனடாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணியில் உன்முக்த் சந்த் இடம்பெறவில்லை. அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த U19 இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவர் தனது X பக்கத்தில், ‘நியாயமற்ற அமைப்புகளை பற்றியும், ஆரோக்கியமான மாற்றங்களின் அவசியம் குறித்தும் மக்கள் பேசுவதை கேட்கிறேன். ஆனால் அதே மக்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதே அநீதியான வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

நிர்மலா சீதாராமனின் கையில் பணம் இல்லை.. ஆனால்!

image

தேர்தலில் போட்டியிட தனது கையில் பணம் இல்லை என சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள காங்., எம்எல்ஏ இவிகேஎஸ் இளங்கோவன், ‘அவரது கையில் பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், பையில், படுக்கை அறையில் பணம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவில் சர்வாதிகாரம் உள்ளதாக அமெரிக்கா, ஜெர்மனி கூறுவதை நிர்மலா சீதாராமனின் கணவரே ஆதரிக்கிறார்’ என கூறியுள்ளார்.

News March 29, 2024

கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை

image

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்ற இளைஞர் EMI முறையில் செல்ஃபோன், மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை வாங்கியிருந்ததாக தெரிகிறது. தவணையை சரியாக திருப்பி செலுத்தாதால் கடன் கொடுத்தவர் ராஜேஷின் வீடு தேடி வந்து அவரது தாய் & தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

News March 29, 2024

இந்த நிலை வந்தால் விவசாயம் செய்ய சென்றுவிடுவோம்

image

காசு கொடுத்து வாக்கு வாங்கும் நிலை எங்களுக்கு வந்தால் விவசாயம் செய்ய சென்றுவிடுவோமென நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தென்காசியில் இசை மதிவாணனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘₹100 கோடி, ₹150 கோடி என செலவழித்து, வாக்குக்கு காசு கொடுத்து, உங்களது வாக்குகளை பெறும் நிலையில் நாம் தமிழர் கட்சி இல்லை. அந்த சூழல் வந்தால் அரசியலை தொடர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’ என்றார்.

News March 29, 2024

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்

image

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் நடித்த அக்‌ஷிதாவுக்கும், ப்ரீத்தம் சுரேஷ் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. கர்நாடகாவின் கூர்க்கில் இரு வீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நேற்று நடந்துள்ளது. அக்‌ஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘My Man’ என்ற ஹேஷ்டேக்குடன் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

News March 29, 2024

₹11 கோடி வரி பாக்கியை செலுத்த நோட்டீஸ்

image

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பழைய PAN எண்ணை பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள வருமானவரித் துறை, நிலுவையில் உள்ள ₹11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சி ₹1,823 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 29, 2024

ஒரு பக்கம் கோலி… ஒரு பக்கம் கம்பீர்

image

ஒரே பிரேமில் விராட் கோலி, மற்றும் கேகேஆர் அணியின் ஆலோசகர் கம்பீர் இருவரும் இருக்கும் இரு புகைப்படங்களை கொல்கத்தா அணி நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இதில் ஒரு புகைப்படத்தில் கோலியையும், மற்றொன்றில் கம்பீரையும் முன்னிலைப்படுத்தி காட்டியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இவர்கள் இருவருக்கும் இடையே பல முறை வார்த்தைப் போர் நடந்துள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் KKR – RCB அணிகள் மோதுவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!