India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய X பதிவில், “நண்பரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து கவலையுற்றேன். இச்சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. ட்ரம்ப் விரைந்து குணமடைய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரயில் விபத்து, சாலை விபத்து உள்ளிட்டவற்றில் பலியாகி உரிமை கோரப்படாமல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்கள் குறித்து உரிய விதிகள், நடைமுறைகளை வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பு மனு தொடுத்துள்ளது. இதை விசாரித்த நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு, இதுகுறித்து வரும் ஆகஸ்ட் 1க்குள் பதிலளிக்கக்கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

பெண்களின் மாங்கல்ய பலம் நிலைத்திருக்க செய்ய வேண்டிய விரதம் குறித்து ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மாத கடைசி செவ்வாய்க்கிழமை அம்மனை நினைத்து பராசக்தி விரதம் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. குளித்துமுடித்து, அம்மனுக்கு விளக்கேற்றி, செம்பருத்தி, அரளிப்பூ மாலை சாற்றி, பால், பழம், வெற்றிலை பாக்கு படைத்து விரதம் இருக்க வேண்டும். பிறகு அன்னதானம் செய்ய வேண்டும் என்று ஆன்மிகம் கூறுகிறது.

பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதன் எதிரொலியாக ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 11ஆம் தேதி புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து, இன்று சென்னையில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. 5 போட்டிகளை கொண்ட தொடரை, 3க்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா ஏற்கெனவே வென்றுவிட்டது. ஆகையால், இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் கடைசி போட்டிக்கு ரசிகர்கள் இடையே பெரிய ஆர்வம் இல்லை. ஜூலை 27ஆம் தேதி முதல் இலங்கை, இந்தியா இடையேயான தொடர் தொடங்கவுள்ளது.

மும்பையில் புதிய திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், ரிசர்வ் வங்கி அறிக்கை இதை உறுதி செய்கிறது என்றும் கூறினார். எதிர்க்கட்சிகள் வேலைவாய்ப்பு தொடர்பாக வதந்திகளை பரப்புவதாகவும், அக்கட்சிகள் முதலீடு, உள்கட்டமைப்பு வளர்ச்சியின் எதிரிகள் என்றும் பிரதமர் மோடி சாடினார்.

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. ஜூன் 14ஆம் தேதி 24 அணிகளுடன் தொடங்கிய தொடர், இன்று இரு அணிகளுடன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் யார் வெல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

திமுகவின் அநீதிகளுக்கு அதன் கூட்டணி கட்சிகள் துணை போவதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருப்பது குறித்த கேள்விக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பதிலளித்துள்ளார். அதில் அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகதான் வலிமையையும், கொள்கையையும் இழந்து விட்டதாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படாமல் டிராமா செய்து வெளியேறியது இபிஎஸ்தான் எனவும் அவர் சாடியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து X தளத்தில் அவர் விளக்கமாக பதிவிட்டுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு சத்தம் கேட்டதாகவும், உடனே வலது காதின் மீது குண்டு பட்டு ரத்தம் கொப்பளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கு ட்ரம்ப் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரம் ஆட்டுச்சந்தை பகுதியில் என்கவுன்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரில் திருவேங்கடமும் ஒருவர் ஆவார். அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்த போது அவர் தப்பியோட முயற்சித்ததாகவும், அப்போது கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
Sorry, no posts matched your criteria.