News July 14, 2024

புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை இன்று திறப்பு

image

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயில் உலக புகழ்பெற்றதாகும். அக்கோயிலின் பொக்கிஷ அறை சாவி தொடர்பாக தேர்தலில் அப்போதைய முதல்வர் நவீன் பட்நாயக், வி.கே. பாண்டியனை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்த பிறகு, அதை திறந்து அங்குள்ளவற்றை கணக்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 46 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது.

News July 14, 2024

₹99க்கு 40 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்

image

அண்மையில் கட்டணங்களை உயர்த்திய ஏர்டெல், சில டேட்டா திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, ₹79 டேட்டா திட்ட விலையை ₹99 ஆக உயர்த்தியுள்ளது. இதன் கீழ் 40 ஜிபி டேட்டாவை அதிவேகத்தில் ஏர்டெல் வழங்குகிறது. வேலிடிட்டி 2 நாட்கள் ஆகும். ஒரு நாளைக்கு 20 ஜிபி என மொத்தம் 40 ஜிபி டேட்டா அளிக்கிறது. 40 ஜிபி டேட்டா முடிந்தாலும், வரம்பற்ற டேட்டா சேவை 64 Kbps வேகத்தில் கிடைக்கும்.

News July 14, 2024

சீன எல்லையில் காலியாக காட்சியளிக்கும் 11 கிராமங்கள்

image

சீன எல்லையையொட்டி, உத்தராகண்டில் 11 கிராமங்கள் மக்கள் யாருமின்றி காட்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 1962 இந்தியா-சீனா இடையேயான போரைத் தொடர்ந்து, உத்தரகாசி, சமோலி, பித்ருகர் மாவட்டங்களில் உள்ள 11 கிராமங்களில் வசித்த மக்கள் பாதுகாப்புப் படையால் வெளியேற்றப்பட்டனர். இதுவரை அங்கு மக்கள் திரும்பி வரவில்லை. இதுகுறித்து முதலமைச்சருக்கு கிராம மேம்பாட்டு துறை ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.

News July 14, 2024

அதிமுகவினர் ஓட்டு யாருக்கு சென்றது?

image

விக்கிரவாண்டியில் 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 48.69% வாக்குகளையும், ஒன்றாக தேர்தலை சந்தித்த அதிமுக, பாமக, பாஜக கட்சிகள் 43.72% வாக்குகளையும் பெற்றன. ஆனால், இடைத்தேர்தலில் திமுக 63.22%, (சட்டசபை தேர்தலை விட 14.53% அதிகம்) பாமக, பாஜக 28.69% வாக்குகள் பெற்றுள்ளன. இதனால், அதிமுகவினர் ஓட்டு அதிகபட்சமாக திமுகவுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. பாமக, நாதகவுக்கு ஓரளவு அதன் வாக்குகள் கிடைத்துள்ளது.

News July 14, 2024

தனித்தனியாக வந்த ஐஸ்வர்யா – அபிஷேக்

image

அம்பானி இல்லத் திருமணத்திற்கு அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் தனித்தனியாக வந்தது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக சில மாதங்களுக்கு முன் பேசப்பட்டது. இந்நிலையில் அபிஷேக் பச்சன், அவரது தாய் தந்தையுடன் வந்திருந்தார். ஆனால், ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக திருமணத்திற்கு வந்தார். இந்த விவகாரம் தற்போது பாலிவுட்டில் பேசு பொருளாகியிருக்கிறது.

News July 14, 2024

ராகுலுடன் கமலா ஹாரீஸ் தொலைபேசியில் பேசினாரா?

image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் தொலைபேசியில் பேசியதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த செய்திகள் குறித்து கமலா ஹாரீஸ் அலுவலகம் பதில் அளித்துள்ளது. ராகுலுடன் கமலா ஹாரீஸ் தொலைபேசியில் பேசியதாக வெளியான செய்தி தவறானது என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

News July 14, 2024

இந்தியாவில் 6 மாதங்களில் 25,923 பேருக்கு கொரோனா?

image

கொரோனா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அண்மையில் இந்தி நடிகர் அக்சய் குமாருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறதா என கேள்வியெழுந்துள்ளது. இந்நிலையில், கேரளாவை சேர்ந்த கொரோனா தரவு ஆய்வாளர் கிருஷ்ண பிரசாத், கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் 25,923 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பதாகவும், 240 பேர் பலியாகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

News July 14, 2024

கொரோனா ஆபத்து இன்னும் விலகவில்லை: WHO எச்சரிக்கை

image

2019ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று 2023 மே மாதம் வரை நீடித்தது. இதற்கு கோடிக்கணக்கானோர் பலியாகினர். இத்தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக 2023இல் உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டை விலக்கின. இந்நிலையில், கொரோனா ஆபத்து இன்னும் விலகவில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் சராசரியாக உலகில் 1,700 பேர் மரணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளது.

News July 14, 2024

SMS மூலம் ரயில் வரும் இடத்தை அறியும் வசதி

image

முன்பதிவு செய்த ரயில் தற்போது எங்கு வருகிறது என SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மொபைல் எண்ணில் இருந்து, 139 என்ற எண்ணிற்கு முதலில் SPOT என பதிவிட்டு, ரயில் எண்ணை குறிப்பிட்டு SMS அனுப்ப வேண்டும். இல்லையேல் LOCATE என பதிவிட்டு, ரயில் எண்ணை குறிப்பிட்டும் SMS அனுப்பலாம். அப்படி அனுப்பினால், ரயில் வரும் இடம் குறித்து பதில் SMS வரும். அதைவைத்து ரயில் பயணத்துக்கு தயாராக முடியும்.

News July 14, 2024

என்கவுன்டர் நடந்த இடத்தில் துப்பாக்கி, வெடி குண்டுகள்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று இன்று காலை போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, ரவுடி திருவேங்கடம் அங்கிருந்த தப்ப முயற்சிக்கவே, சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதனிடையே, என்கவுன்டர் நடந்த இடத்தில் துப்பாக்கி, 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை தயாரித்தது யார்? எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!