News July 14, 2024

போலி இ-மெயிலால் பணம் பறிபோக வாய்ப்பு

image

சைபர் கிரைம் துறை சார்பில் மக்களுக்கு பத்திரிகை விளம்பரம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், “அரசு அலுவலகத்தில் இருந்து E-Notice” என்ற பெயரில் போலி இ-மெயில் மக்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், அந்த மின்னஞ்சலை கிளிக் செய்தாலோ அல்லது பதில் அளித்தாலோ சைபர் மோசடிக்கு ஆளாக நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து 1930, <>cybercrime.gov.in<<>> இல் புகார் அளிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

News July 14, 2024

ஆடு ஜீவிதம் OTT ரிலீஸ் தேதி

image

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடிப்பில் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘ஆடு ஜீவிதம்’. இது 2008ல் மலையாளத்தில் வெளியான ‘ஆடு ஜீவிதம்’ என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவானது. இந்நிலையில், இப்படம் ஜூலை 19 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 14, 2024

உடல் எடையை குறைக்குமா தண்ணீர் விரதம்?

image

உணவுக்கு பதில் தண்ணீர் மட்டுமே அருந்தி கொண்டு இருப்பது “தண்ணீர் விரதம்” எனப்படுகிறது. இதுபோல 21 நாள்கள் தண்ணீர் மட்டுமே அருந்திக் கொண்டு, கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த அடிஸ் மில்லர், உடல் எடையில் 13 கிலோ குறைத்ததாக கூறப்படுகிறது. இந்த விரதத்தால் உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேறுவது, செரிமானம் மேம்படுவது போன்ற நற்பயன் இருந்தாலும், மருத்துவர் மேற்பார்வையின்றி செய்ய கூடாதென வலியுறுத்தப்படுகிறது.

News July 14, 2024

ரேஷன் அரிசி பதுக்கலா? இதில் புகார் அளிக்கலாம்

image

ரேஷனில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவை சில நேரம் பதுக்கப்படுவதும், கடத்தப்படுவதும் நடப்பது உண்டு. இதுகுறித்து புகார் அளிக்க தமிழக அரசின் பொதுவிநியோகத் துறை பிரத்யேக தொலைபேசி எண்ணை செயல்படுத்தி வருகிறது. 1800-599-5950 என்பதே அந்த எண் ஆகும். அதில் தொடர்பு கொண்டு அதுகுறித்து புகார் அளிக்கலாம். அதன்மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

News July 14, 2024

நொடிக்கு எத்தனை கோழிகள் கொல்லப்படுகின்றன?

image

உலகம் முழுவதும் ஒரு நொடிக்கு 2,384 கோழிகள் உணவுக்காக கொல்லப்படுவதாக Faunalytics புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில், 97 வாத்துகள், 47 பன்றிகள், 12 மாடுகள், 18 ஆடுகள் உணவுக்காக கொல்லப்படுகின்றன. 2022ஆம் ஆண்டு எடுத்த கணக்கீட்டின்படி இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எடையின் அளவில் மாட்டிறைச்சியும் பன்றிறைச்சியுமே அதிகம் நுகரப்படும் உணவாக இருக்கிறது.

News July 14, 2024

போட்டோவில் பதிவான புல்லட்

image

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பை நோக்கி பாய்ந்துவந்த புல்லட், போட்டோ ஒன்றில் தெளிவாக பதிவாகியிருக்கிறது. நூலிழையில் தவறிய அத்தோட்டா, ட்ரம்பின் காதுகளை பதம் பார்த்தது. இன்னும் இரண்டு இஞ்ச் விலகியிருந்தால் கூட தோட்டா ட்ரம்ப்பின் தலையில் பாய்ந்திருக்கும். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்று அந்நாட்டு FBI அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 14, 2024

இலவச ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

ஆடி மாதத்தில் மூத்த குடிமக்கள் இலவசமாக அம்மன் கோயில்களுக்கு சுற்றுலா செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? என பார்க்கலாம். 60 வயதான இந்துமதத்தினர் விண்ணப்பிக்கலாம். அறநிலையத்துறை உதவியாளர், கோயில் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் கிடைக்கும். hrce.tn.gov.in இணையதளத்திலும் பதிவிறக்கலாம். இதை உரிய சான்றுடன் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 14, 2024

ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை

image

ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் மொபைலில் பாதுகாப்பு இணைப்புகளை உடனடியாக புதுப்பிக்குமாறு இந்திய கணினி அவசரகால பதில் குழு எச்சரித்துள்ளது. Android 12, 12L, 13, 14க்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் மொபைலில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் கூறியுள்ளது. இதனால், போன்கள் ஹேக் ஆகும் அபாயம் உள்ளதால், போன் செட்டிங்ஸில் சிஸ்டம் அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்து அப்டேட் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 14, 2024

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கிரேட் காளி

image

மும்பையில் நேற்று நடந்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் கிரேட் காளி கலந்துகொண்டார். ஏழு அடி உயரத்தில் கம்பீரமாக நின்ற கிரேட் காளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பல பிரபலங்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முகேஷ் அம்பானி மற்றும் ஆனந்த்-ராதிகாவுடன் காளி இருக்கும் படங்கள் வைரலாகி வருகின்றன.

News July 14, 2024

அமெரிக்க அதிபர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

image

ட்ரம்ப் மீது நடத்தப்பட்டது போல இதற்கு முன்பும் பல அமெரிக்க அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளன. ஆபிரஹாம் லிங்கன் (1865), ஹார்பீல்ட் (1881), மெக்கன்லி (1901), ரூஸ்வெல்ட் (1912), கென்னடி (1963), ஜெரார்ட் போர்ட் (1975), ரீகன் (1981), ட்ரம்ப் (2016, 2024) ஆகியோர் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் லிங்கன், ஹார்பீல்ட், மெக்கன்லி, கென்னடி ஆகியோர் பலியாகினர்.

error: Content is protected !!