India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் தப்பி ஓட முயற்சித்தார் என்று காவல்துறை சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவேங்கடம் இன்று காலை போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட நிலையில், ஏதோ உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பதாக அண்ணாமலை சந்தேகம் எழுப்பியுள்ளார். வழக்கு சரியான திசையில்தான் செல்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘வருஷமெல்லாம் வசந்தம்’ பட இயக்குநர் ரவிஷங்கர் நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், உடல் அடக்கம் செய்யப்படாமல் உள்ளது. 63 வயதாகியும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தம்பியின் மறைவை அறிந்து மும்பையிலிருந்து வர முடியாத நிலையில், வயது முதிர்ந்த அக்கா உள்ளார். வெளிநாட்டில் இருந்து இறுதி அஞ்சலி செலுத்த அண்ணன் திரும்பிக்கொண்டிருக்கிறார். கண்ணீர் சிந்த ஆள் இன்றி ஆதரவற்ற நிலையில், அவரது உடல் உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பைடனும் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. இந்த சூழலில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் பைடனுக்கு தொடர்பிருப்பதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டத் தொடங்கியுள்ளனர். இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 18 – 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆண்டர்சன் ஓய்வை அறிவித்ததால் அவருக்குப் பதில் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் டெஸ்டில் கடைசியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 7- 11 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மும்பையில் செயற்பட்டுவரும் சர்வதேச விமான நிலையத்தில் நிரப்பப்பட உள்ள 1049 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூலை 14) கடைசி நாளாகும். இதற்கு 28 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கூடுதல் தகவல்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு <

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என அமைச்சர் பொன்முடி கூறினார். 67,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்று குறிப்பிட்ட அவர், இது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்று பெருமிதம் தெரிவித்தார். அத்துடன், விக்கிரவாண்டி மக்களுக்கும், களத்தில் பணியாற்றிய அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி கூறினார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரசாரக் கூட்டத்தில் சுடப்பட்டார். நூலிழையில் தவறிய குண்டு அவருடைய வலது காதினை உரசிச் சென்றது. சட்டென பதுங்கிய அவர், பின்னர் எழுந்து நின்று வலது கையை உயர்த்தி கோஷம் எழுப்பியபடி சென்றார். முகத்தில் ரத்தம் வழிய, பாதுகாப்புப் படையினர் அவரை அழைத்துச் சென்றனர். பின்னணியில் அமெரிக்க கொடியுடன் போட்டோவில் பதிவான இந்தக் காட்சி வரலாற்று தடமாக மாறியிருக்கிறது.

தமிழகத்தில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புண்டு. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சைபர் கிரைம் துறை சார்பில் மக்களுக்கு பத்திரிகை விளம்பரம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், “அரசு அலுவலகத்தில் இருந்து E-Notice” என்ற பெயரில் போலி இ-மெயில் மக்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், அந்த மின்னஞ்சலை கிளிக் செய்தாலோ அல்லது பதில் அளித்தாலோ சைபர் மோசடிக்கு ஆளாக நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து 1930, <
Sorry, no posts matched your criteria.