News March 30, 2024

மாஸ்கோ தாக்குதல்: தஜிகிஸ்தானில் 9 பேர் கைது

image

மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தஜிகிஸ்தானில் 9 பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். பிரபல இசை நிகழ்ச்சி அரங்கில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் குழந்தைகள் உள்ளிட்ட 144 பேர் பலியாகினர் (100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்). இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்த நிலையில், ஏற்கெனவே 11 பேரை ரஷ்யா கைது செய்திருந்தது.

News March 30, 2024

டெல்லி முதல்வர் ஆவதற்கு தயாராகி வரும் மேடம்

image

பீகாரில் ராப்ரி தேவி செய்தது போல் டெல்லியில் முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா ஏற்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆம் ஆத்மி கட்சியின் 2ஆம் கட்ட தலைவர்களை கெஜ்ரிவாலும், சுனிதாவும் ஓரங்கட்டிவிட்டார்கள். மத்திய அரசை விமர்சித்து வரும் ‘மேடம்’ (சுனிதா) முதல்வர் ஆக தயாராகி வருகிறார்” எனக் கூறினார்.

News March 30, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (மார்ச் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 30, 2024

ஆஸ்., மக்கள்தொகையை விட இது அதிகம்

image

வேலையில்லாத இந்தியர்களில் 83% பேர் இளைஞர்களாக இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “2022-23 ஆம் நிதியாண்டில், EPFOஇல் 6.4 கோடி பேர் தங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் மக்கள் தொகையைவிட இந்த எண்ணிக்கை அதிகமாகும்” என்றார்.

News March 30, 2024

BREAKING: நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

image

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திருவான்மியூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் டேனியல் பாலாஜிக்கு இன்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

News March 30, 2024

ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்

image

RCB, KKR இடையிலான நேற்றைய லீக் ஆட்டத்தின்போது, விராட் கோலியை கவுதம் கம்பீர் கட்டியணைத்தார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவை பார்த்த சுனில் கவாஸ்கர், தனக்கே உரிய பாணியில் ரியாக்ஷன் கொடுத்துள்ளார். அதாவது, “KKR அணிக்கு ஃபேர்பிளே விருது கிடைக்கும் என்று ரவி சாஸ்திரி கூறுகிறார். கோலி, கம்பீர் கட்டியணைத்துக் கொண்டதற்காக ஃபேர்பிளே மட்டுமல்ல ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

News March 30, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*போதைப்பொருள் புழக்கத்திலிருந்து சமூகத்தை காக்க வேண்டும் – பிரதமர் மோடி
*அரசியலில் மதம் கலந்த நாடு உருப்படாது; அரசியல் வேறு மதம் வேறு – கமல்ஹாசன்
*மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை மாலை வெளியாகிறது.
*RCB அணிக்கு எதிரான 10ஆவது லீக் போட்டியில் KKR அணி வெற்றி பெற்றது.
*2023-24ஆம் நிதியாண்டில் பிட்காயின் மதிப்பு ₹61.5 லட்சம் ஆக (150%) அதிகரித்துள்ளது.

News March 30, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (மார்ச் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 30, 2024

‘FAN WAR’ நிலை அருவருப்பாக உள்ளது

image

இந்தியாவில் ‘FAN WAR’ நிலை மிகவும் அருவருப்பாக உள்ளதாக அஷ்வின் தெரிவித்துள்ளார். ரோகித்-ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் மோதலை சுட்டிக்காட்டியுள்ள அவர், இங்கிலாந்து அணி வீரர்களின் ரசிகர்கள் சண்டை போட்டு நான் பார்த்ததில்லை எனக் கூறியுள்ளார். மேலும், கங்குலி கேப்டன்சியில் சச்சின், டிராவிட் கேப்டன்சியில் கங்குலி, சச்சின் மற்றும் தோனி கேப்டன்சியில் அனைத்து ஜாம்பவான்களும் விளையாடவில்லையா என வினவியுள்ளார்.

News March 30, 2024

தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்

image

அரசியலில் மதம் கலந்த நாடு உருப்படாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாஜகவை விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்த கமல், இன்று முதல் தனது பரப்புரையைத் தொடங்கினார். ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பேசிய அவர், ‘தமிழ் மொழி மீது காதல் இருந்தால், இந்தியாவில் தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்’ என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!