India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில், நாளை முதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் சூழலில், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

எமர்ஜென்சி ஒரு தவறான முடிவுதான் என்றும், பின்னாளில் அதை இந்திரா காந்தியே ஏற்றுக்கொண்டார் எனவும் காங்., மூத்த தலைவர் பா.சிதம்பரம் கூறியுள்ளார். எமர்ஜென்சி பிரகடனப்படுத்தி 50 ஆண்டுகளுக்குப் பின் பாஜக அதைப்பற்றி விவாதிப்பதில் ஒரு பயனும் இல்லை என்ற அவர், பாஜக அதை மறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எமர்ஜென்சியை எளிதில் திணிக்க முடியாத வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளோம் எனக் கூறினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் (12), கில் (13), அபிஷேக் ஷர்மா (14) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதும், சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் துபே 26, ரிங்கு சிங் 11* ரன்கள் எடுக்கவே இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

தமிழகத்தில் ₹4730 கோடி அளவிற்கு மணல் கொள்ளை நடந்துள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் 190 ஹெக்டேரில் 28 இடங்களில் மணல் அள்ள அனுமதி பெறப்பட்டதாகவும், ஆனால், 987 ஹெக்டேரில் மணல் அள்ளப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஐந்து மாவட்டங்களில் முறைகேடாக மணல் அள்ளப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘புதுமைப் பெண்’ திட்டத்தால், உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கையில் சாதித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேசிய அளவில், பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 26%ஆக உள்ளது. இந்த நிலையில், மாதம் ₹1000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தால் தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை 52% என்ற மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

பாஜக ஆட்சியில் பெரு நிறுவனங்களை விட தனிநபர்கள் அதிக வரி செலுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் தனிநபர் வரி 21%ஆக இருந்ததாக கூறியுள்ள அவர், தற்போது தனிநபர் வரி 28%ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். அதே நேரம், பெரு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 35%இல் இருந்து, 26%ஆக பாஜக ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு, தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுவதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள எந்த தனியார் பள்ளியும், கல்வி வழங்குவதை சேவையாக செய்வதில்லை என குற்றஞ்சாட்டிய அவர், முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.

வங்கிக் கணக்கிலிருந்து ரொக்கமாக, ஒரு நிதியாண்டில் குறிப்பிட்ட வரம்பை தாண்டி பணம் எடுத்தால், வருமானவரிச் சட்ட பிரிவு 194N படி வரி விதிக்கப்படும். அதன் விவரம்.
*வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், ஒரு நிதியாண்டில் ₹1 கோடி வரை எடுக்கலாம். அதற்குமேல் எடுத்தால் 5% TDS பிடிக்கப்படும்.
*வருமானவரி செலுத்தாதவர்கள், ஒரு நிதியாண்டில் ₹20 லட்சம் வரை எடுக்கலாம். அதைத் தாண்டினால் 2% TDS கழிக்கப்படும்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த 8 மாதங்களில் தன்னை கொல்ல 2 முயற்சிகள் நடந்ததாக, தொழிலதிபர் எலான் மஸ்க் அதிர்ச்சிகர தகவலை தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். டெக்சாஸில் உள்ள டெஸ்லா தலைமையகத்தில் இருந்து சற்று தொலைவில் அவர்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய பங்குச்சந்தை தொடர் வளர்ச்சியை கண்டு வருகிறது. அந்த வகையில், டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ₹1,72,225 கோடி உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக டிசிஎஸ் மதிப்பு ₹62,393 கோடி அதிகரித்து, ₹15,14,133 கோடியாக உயர்ந்துள்ளது. ஐடிசி மதிப்பு ₹31,858 கோடி உயர்ந்து, ₹5,73,258 கோடியாகவும், இன்போசிஸ் மதிப்பு ₹26,905 கோடி உயர்ந்து, ₹7,10,827 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.