News July 14, 2024

சிறந்த கண் பார்வைக்கு

image

*பண்ணை, முருங்கை, வெந்தயம், சிறு கீரைகளில் ஒன்றை நாள்தோறும் சாப்பிடவும்.
*சந்தனாதி, திரிபால, பொன்னாங்கண்ணி தைலங்களில் ஒன்றை வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளிக்கவும்.
*கடுக்காய் தோல், நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து, மிளகு ஆகியவற்றை அரைத்து பொடியாக்கி, வாரம் ஒருமுறை பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கவும். *தினமும் 3 லி. தண்ணீர் குடிப்பது வறட்சியில் இருந்து கண்களை காக்கும்.

News July 14, 2024

கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசம்: அதிஷி

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமாக இருப்பதாக, அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு அபாயகரமான அளவில் குறைந்துள்ளதாகவும், அவரது உடல் எடை 8.5 கிலோ அளவில் குறைந்துள்ளதாகவும் கூறினார். இந்த சூழலில், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News July 14, 2024

BREAKING: இந்தியா அபார வெற்றி

image

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே, அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 18.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றி மூலம் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

News July 14, 2024

மோமோஸ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ₹60,000 இழப்பீடு

image

கர்நாடகா மாநிலம் தார்வாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு ₹60,000 இழப்பீடு வழங்க சொமேட்டோ நிறுவனத்திற்கு அம்மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மோமோஸ் ஆர்டர் செய்த பெண், ஜிபே மூலம் ₹133.25 செலுத்தியுள்ளார். ஆனால், உணவு டெலிவரி ஆகாமலேயே, டெலிவரி செய்யப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. இது குறித்து புகார் அளித்தும் சொமேட்டோ உரிய நடவடிக்கை எடுக்காததால், அந்த பெண் வழக்கு தொடுத்துள்ளார்.

News July 14, 2024

அனைத்து புனித தலங்களிலும் பாஜக தோல்வி: சு.வெங்கடேசன்

image

ஸ்ரீ ராமபிரானின் அனைத்து திருத்தலங்களிலும் பாஜக தோல்வியடைந்துள்ளதாக, மதுரை MP சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அயோத்தி, பிரயாக் ராஜ், ராமநாதபுரம், நாசிக், ராம்டெக், சித்ரகூட், பத்ரிநாத் என அனைத்து தொகுதிகளிலும் பாஜக சந்தித்த தோல்வியை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தீமைகள் வீழ்த்தப்படுவதே ராமகதையின் நியதி எனவும் பதிவிட்டுள்ளார்.

News July 14, 2024

30 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கரூர், நாமக்கல், திருச்சி, தென்காசி, நெல்லை, குமரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தி.மலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், கடலூர், அரியலூர் உள்பட 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News July 14, 2024

உயர்கல்வியில் உள்ள குறைபாடு ‘நீட்’டால் அம்பலம்: ராகுல்

image

பொது மருத்துவக் கல்வியை முறையாக கட்டமைப்பதில், தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், தமிழகத்தின் பொது சுகாதார அமைப்பை பலவீனப்படுத்தும் முயற்சியை கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், உயர்கல்வி அமைப்பிலுள்ள குறைபாடுகளை நீட் தேர்வு அம்பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

X தளத்தில் சாதனை படைத்த பிரதமர் மோடி

image

X தளத்தில் அதிக நபர்கள் பின் தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி, 10 கோடிக்கும் அதிகமானோர் மோடியை பின் தொடர்கின்றனர். அமெரிக்க அதிபர் பைடனை 3.81 கோடி பேரும், துபாய் அதிபர் ஷேக் முகமதுவை 1.12 கோடி பேரும் பின் தொடர்கின்றனர். இந்தியாவை பொறுத்தமட்டில், ராகுல் காந்தியை 2.64 கோடி பேரும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை 2.75 கோடி பேரும் பின் தொடர்கின்றனர்.

News July 14, 2024

TNPL : திருச்சி அபார வெற்றி

image

TNPL தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் திருச்சி மற்றும் சேலம் அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. இதன்பின் களமிறங்கிய சேலம் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் முகமது கான் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். திருச்சி அணியில் சிறப்பாக பந்து வீசிய சரவணக்குமார் 3 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

News July 14, 2024

டிரம்ப் உயிரை காத்த கடவுள் ஜெகந்நாத்?

image

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் உயிரை ஜெகந்நாதர் காப்பாற்றியதாக, அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 48 ஆண்டுகளுக்கு முன்பு அவர் செய்த கர்ம வினையால், அவரை கடவுள் காப்பாற்றியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. 1976ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஜெகந்நாதரின் ரத யாத்திரைக்கு, தேரை உருவாக்க டிரம்ப் உதவியதாகவும், அதனால், அவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!