News July 8, 2025

பள்ளி வேன் விபத்து.. சுக்கு நூறாகி போன கனவுகள்!

image

பள்ளி வேன் விபத்தில் அக்கா, தம்பி உள்பட 3 மாணவர்கள் உயிரிழந்தது பேரதிர்ச்சி என்றால், ஒரு தந்தையின் கனவு சுக்கு நூறாக நொறுங்கிப் போனது பெருந்துயரம். மகள் சாருமதியை டாக்டராக்க வேண்டும் என்றும், மகன் செழியனை IAS அதிகாரியாக்க வேண்டும் எனவும் தந்தை திராவிட மணி ஆசையில் இருந்திருக்கிறார். அவருக்கு இப்போது கிடைத்திருப்பது கனவுகள் சிதைந்த 2 உடல்கள் மட்டுமே. RIP

News July 8, 2025

காது குடைய buds யூஸ் பண்ணால்… எச்சரிக்கை

image

காதில் இயற்கையாகவே உற்பத்தியாகும் மெழுகு போன்ற திரவம், நாளடைவில் கெட்டியாகி அதுவே வெளியே விழுந்துவிடும். ஆனால், பட்ஸ், குச்சி (அ) வேறு எதைக் கொண்டும் காதை குடையும்போது கொஞ்சம் தவறினாலும் செவிப்பறை சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், காதுகேளாமை, குமட்டல் & வாந்தியுடன் கூடிய நாள்பட்ட தலைச்சுற்றல், சுவை குன்றுதல், ஏன் சில நேரம் முகத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

News July 8, 2025

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தந்தை காலமானார்

image

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் காலமானார். உடல் நலக்குறைவால் சில நாள்களாக ஜோத்பூர் எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிர் பிரிந்தது. ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், வழக்கறிஞராகவும் வருமான வரி ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார். அஷ்வினி வைஷ்ணவ் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News July 8, 2025

டெக்சாஸை மூழ்கடித்த பெரு வெள்ளம்… 104 பேர் உயிரிழப்பு

image

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கெர் கவுண்ட்டியில் மட்டும் சுமார் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. பலரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

News July 8, 2025

இரவு 10 மணிக்கு என்ன நடக்கப் போகிறது?

image

இந்தியா- அமெரிக்கா இடையே நடந்துவரும் வர்த்தக பேச்சுவார்த்தை, இறுதிநிலையை எட்டியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 26%-ஆக உயர்த்திய டிரம்ப், அதற்கு கொடுத்த 90 நாள் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், IND-USA இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு இரவு 10 மணிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர 14 நாடுகளுக்கான வரி உயர்வு ஆக., 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.

News July 8, 2025

செயற்குழு தீர்மானங்கள் செல்லாது: அன்புமணி

image

ராமதாஸ் தலைமையிலான செயற்குழு தீர்மானங்கள் செல்லாது என அன்புமணி தலைமையிலான நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து ஜூலை 20-ல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பாமகவின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் அன்புமணிக்கு மட்டுமே உண்டு எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News July 8, 2025

திமுக 200+ தொகுதிகளில் வெல்ல வாய்ப்பில்லை: இபிஎஸ்

image

200+ தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். கோவையில் 2வது நாளாக பரப்புரை மேற்கொண்ட அவர், தாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவிற்கு என்னவென்று கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணியை மட்டுமே நம்பி இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதிமுக மக்களை நம்பி இருப்பதாகத் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் பிரச்னை இல்லை என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.

News July 8, 2025

அஜித் குமார் மரணம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்குடன் நிகிதாவின் நகை காணாமல்போன வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், அஜித் குமார் கொலை வழக்கின் விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 20-ம் தேதிக்குள் முடித்து இறுதி அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், திடீர் திருப்பமாக இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News July 8, 2025

மலையாள நடிகர் சௌபின் சாகிர் கைது

image

பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்புக்கு ₹7 கோடி பெற்றுக்கொண்டு பணத்தையோ, லாப விகிதத்தையோ தரவில்லை என சிராஜ் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக சௌபின் சாகிர், அவரது தந்தை உட்பட 3 பேரும் ஏற்கெனவே முன்ஜாமின் வாங்கி இருந்த நிலையில் விசாரணைக்கு பின் சொந்த ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

News July 8, 2025

இன்டர்நெட் இல்லாமலே மெசேஜ் அனுப்பலாம்… புதிய ஆப்!

image

டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் CEO ஜாக் டோர்ஸி, ‘பிட்சாட் (Bitchat) என்ற புதிய மெசேஜிங் ஆப்-ஐ உருவாக்கியுள்ளார். இதற்கு இன்டர்நெட், போன் நம்பர், (அ) சர்வர் எதுவும் தேவையில்லை. புளூடூத் மூலம் peer-to-peer முறையில் இந்த ஆப்பில் மெசேஜ் அனுப்பலாம். தற்போது இது டெஸ்டிங்கில் உள்ளது. தனியுரிமை பாதுகாப்பு மற்றும் off-grid communication நோக்கில் பிட்சாட்டை உருவாக்கியுள்ளதாக ஜாக் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!