India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை 11 நாட்கள் தள்ளிப்போகிறது. ரம்ஜான், தமிழ், தெலுங்கு புத்தாண்டு, தேர்தல் என பல்வேறு காரணங்களால் ஏப்.10, 12ஆம் தேதிகளில் நடக்க இருந்த தேர்வுகள் ஏப்.22, 23ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், கோடை விடுமுறை ஏப்.13ல் தொடங்குவதற்கு பதில் ஏப்.26ல் தொடங்க உள்ளது.
பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் கேட்டு மதிமுக விண்ணப்பித்திருந்தது. பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால், முன்னுரிமை அடிப்படையில் திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விசிகவும் பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் திருமா, ரவிக்குமாருக்கு பானை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.
வாயை திறந்தால் அண்ணாமலை பொய் மட்டுமே பேசுவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் பேசிய அவர், “சிலர் எப்போதாவது பொய் பேசுவதை பார்த்திருப்போம். ஆனால் பொய் பேசுவதையே தினசரி வாடிக்கையாக அண்ணாமலை வைத்துள்ளார். 5 வயதில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 புத்தகம் படித்தால் கூட 20 ஆயிரம் புத்தகத்தைப் படித்திருக்க முடியாது. ஆனால், இவர் எப்படி படித்து முடித்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது” எனக் கூறினார்.
கடந்த ஒருவாரமாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹50,960க்கும், கிராமுக்கு ₹20 குறைந்து ₹6,370க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.81க்கும், கிலோ வெள்ளி ₹200 அதிகரித்து ₹81,000க்கும் விற்பனையாகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை குழந்தைகளுக்கு தேநீர், உணவு சமைக்கும் போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படவுள்ளன. அரசு பள்ளிகளில் தற்போது கருப்பு நிற போர்டுகள் உள்ளன. இதற்கு பதிலாக ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக ஏப். 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டு விநியோகிக்கப்படவுள்ளன. வரும் கல்வி ஆண்டில் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் ஆசிரியர்கள் 80,000 பேருக்கு டேப் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மாறி வரும் கற்றல், கற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு டேப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்ததாகவும், அதன்படி 3 கட்டங்களாக டேப் வழங்கப்பட உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவருக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவர், இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பட்டியலின மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க அவர் விலகியது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியுடன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஏர்டெல் டிஸ்னி ஹாட்ஸ்டார், எக்ஸ்ட்ரீம் ஓடிடிகளுடன் திட்டங்களை அளித்தது. இந்நிலையில் ரூ.1,499 ரிசார்ஜூக்கு, 84 நாள்கள் வேலிடிட்டியுடன் நாள்தோறும் 3 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புடன் புதிய திட்டத்தை ஏர்டெல் கொண்டு வந்துள்ளது. ஜியோவில் ஏற்கெனவே இதேபோன்ற திட்டம் உள்ளது.
கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, ஜெர்மனி, ஐநாவுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசுகையில் “வலுவான நீதித்துறையை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா. தனிநபரோ, ஒரு குழுவோ, அதில் பாதிப்பு ஏற்படுத்த முடியாது. ஆதலால் சட்டத்தின் ஆட்சி குறித்து யாருடைய பாடமும் இந்தியாவுக்கு தேவையில்லை” என பதிலடி கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.