News July 15, 2024

77 முக்கிய ரவுடிகள் கைது

image

பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் கடந்த 2 நாள்களில் மட்டும் குற்ற சரித்திர பதிவேட்டில் இடம்பெற்றுள்ள 77 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் ரவுடிகளை கைது செய்து, சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

News July 15, 2024

26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி தேனி, சேலம், நீலகிரி, கோவை, வேலூர், மதுரை, கடலூர், திருப்பூர், சென்னை, விழுப்புரம், தென்காசி, விருதுநகர், காஞ்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, நெல்லை, கள்ளக்குறிச்சி, குமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

News July 15, 2024

போதைப் பொருள்: நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது

image

கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரரும், நடிகருமான அமன் ப்ரீத் சிங் ஹைதராபாத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தொடர்பாக ஹைதராபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ₹2 கோடி மதிப்புள்ள 200 கிராம் கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட கும்பலுடன் அமனுக்கும் தொடர்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

News July 15, 2024

யாரெல்லாம் BSNLக்கு மாறலாம்?

image

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொபைல் கட்டணங்களை உயர்த்தியுள்ளதால், பலரும் BSNLக்கு மாற விரும்புகின்றனர். அதே நேரம், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் BSNL பொருத்தமானதாக இருக்காது என்பது பொதுவான பார்வையாக உள்ளது. குறிப்பாக, Internet சேவை சிறப்பாக இல்லாததால், அதிகளவில் நெட் பயன்படுத்துபவர்களுக்கு BSNL சரிப்படாது என்கிறார்கள். மாறாக, பேசிக் ஃபோன் பயனாளர்களுக்கு BSNL வரப்பிரசாதமாக இருக்கும்.

News July 15, 2024

‘F’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்?

image

‘F’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்கள் எதையும் முன்கூட்டியே கணிக்கும் அறிவுக்கூர்மையும், ஆற்றலும் கொண்டிருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். கடின உழைப்பு, விடாமுயற்சி, உறவில் நேர்மை, பொறுமை, புறம்பேசாமை, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை பண்பாக கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கின்றனர். சுக்கிரனால் ஆளப்படும் ‘F’ என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இதை பகிருங்கள்.

News July 15, 2024

முதல் CNG ஸ்கூட்டரை களம் இறக்கும் TVS

image

பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் CNG பைக்கை அறிமுகம் செய்து வாகன சந்தையில் கவனம் ஈர்த்துள்ளது. இதை தொடர்ந்து, உலகின் முதல் CNG ஸ்கூட்டரை TVS நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தின் பிரபலமான Jupiter 125 ஸ்கூட்டர் CNG வசதியுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. CNG வாகனங்கள் குறித்து உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்.

News July 15, 2024

‘சண்டாளர்’ என்ற பெயரை தடை செய்தது ஏன்?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் நிர்வாகி துரை முருகன், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய பாடலை பாடியதற்காக கைது செய்யப்பட்டார். இதே பாடலை சீமான் பாடியது விவாதப்பொருளானது. அந்த பாடலில், ‘சண்டாளர்’ என்ற சாதி பெயர் வசைப்பாடுவதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, ‘சண்டாளர்’ என்ற பெயரை வசைப்பாட பயன்படுத்த SC/ST ஆணையம் தடை விதித்துள்ளது.

News July 15, 2024

Apply Now: அஞ்சல் துறையில் 44,228 பணியிடங்கள்

image

இந்தியா ஃபோஸ்டில் காலியாகவுள்ள GDS, BPM, ABPM பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியாகவுள்ள 44,228 இடங்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ₹100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். பெண்கள், SC, ST, PwD மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.

News July 15, 2024

இம்ரான் கான் கட்சிக்கு தடை?

image

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிடிஐ தலைவர்களின் பல்வேறு தேச துரோக செயல்கள் வெளிச்சத்துக்கு வந்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழல் வழக்கில் கைதாகி இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், பிடிஐ கட்சியை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

News July 15, 2024

“சண்டாளர்” என்ற பெயரை பயன்படுத்த தடை

image

தமிழ்நாட்டில் “சண்டாளர்” என்ற சாதிப் பெயரை வசைபாடவோ, நகைச்சுவையாகவோ பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது. பட்டியலின சாதிப் பிரிவு பட்டியலில் 48ஆவதாக சண்டாளர் என்ற சாதிப் பெயர் உள்ளது. எனவே, பட்டியலினத்தில் உள்ள இந்த பிரிவினரை வசை பாடுவதற்கு பயன்படுத்த கூடாது, மீறி பயன்படுத்தினால் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளது.

error: Content is protected !!