India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெற்றுவரும் போரில் காஸா நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கட்டட இடிபாடுகள் மட்டும் 40 டன் அளவிற்கு இருப்பதாகவும், அதை அகற்றுவதற்கு 500 – 600 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்றும் ஐநா மதிப்பிட்டுள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் அங்கு குவிந்துள்ள இடிபாடுகளை அகற்றினால், முற்றிலும் அகற்ற குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளது.

* மேஷம் – பக்தியுடன் இருங்கள் *ரிஷபம் – பாசம் காட்டுங்கள் *மிதுனம் – பயத்தை தவிருங்கள் *கடகம் – பகை உண்டாகும் *சிம்மம் – விவேகத்துடன் செயல்படுங்கள் *கன்னி – பாராட்டு கிடைக்கும் *துலாம் – மகிழ்ச்சியாக இருப்பீர்கள் *விருச்சிகம் – உயர்வு காண்பீர்கள் *தனுசு – பண வரவு கிட்டும் *மகரம் – தடங்கல் ஏற்படலாம் *கும்பம் – வெற்றி பெறுவீர்கள் *மீனம் – வார்த்தைகளில் கவனம் தேவை

தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வின் மூலம் மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ₹6,000 கோடிக்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும் எனக் கூறிய அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்காக மக்களுக்கு கொடுத்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு என விமர்சித்துள்ளார். கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இரவு ஒரு மணி வரை 31 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி, நீலகிரி, கடலூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் 6,128 Clerk பணியிடங்களுக்கு www.ibps.in என்ற இணையதளத்தில் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.. விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ₹850, SC, ST-க்கு ₹175. முதல் நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும், முதன்மைத் தேர்வு அக்., மாதத்திலும் நடைபெறும். மேலும், தமிழ்நாட்டில் SC, ST பிரிவினருக்கு ஆக.12 – 17 வரை இப்பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர்களில் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு கட்டணத்தில் மாற்றமில்லை என்று டான்ஜெட்கோ அறிவித்துள்ளது. *200 யூனிட் வரை 63 லட்சம் பேருக்கு மாதம் ₹5, *200-300 யூனிட் வரை 35 லட்சம் பேருக்கு மாதம் ₹15, *300- 400 யூனிட் வரை 25 லட்சம் பேருக்கு மாதம் ₹25 வரை மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசை கண்டிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களவைத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளின் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தயாரிப்புகளை CO – OP Mart என்ற செயலி மூலம் ஆர்டர் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்கள் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியில் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மசாலா பொருட்கள், தேன், குளியல் சோப்பு, சமையல் எண்ணெய், பூஜை பொருட்கள், உயிரி உரங்கள், பூச்சிக் கொல்லிகள் உள்ளிட்டவை கிடைக்கும்.

மாணவர்களுக்கு இட்லி, தோசை வழங்கப்படுவதில்லை என அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசின் Fact Check விளக்கமளித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தில் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் மதிய உணவில் 5 நாள்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது என்றும் மத்திய அரசு நிர்ணயித்த கலோரி, புரதத்தை விட தமிழக அரசு அதிகமாக வழங்குவதாகவும் விளக்கமளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.