India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 8 % அல்லது அதற்கு மேல் வளர்ச்சியடையும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‘பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, பருப்பொருளாதார நிலைத்தன்மை ஆகிய காரணிகளால் 2023-24ஆம் நிதியாண்டிற்கும் இதேயளவுக்கு 8% ஜி.டி.பி வளர்ச்சியை எதிர்ப்பார்க்கலாம்’ என்றார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வேட்பாளர்கள் கூட இல்லையென முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ‘பாஜகவில் வேட்பாளர்கள் இல்லையென்பதால் முன்னாள் ஆளுநர், எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் பத்திர ஊழலுக்கு பின் பாஜக தோற்குமென்ற உளவுத்துறை அறிக்கையால் மோடி தூக்கத்தை தொலைத்து நிற்கிறார்’ என்றார்.
அதிமுக வெற்றிபெற்றால் புதுச்சேரி சிங்கப்பூர் போல மாற்றப்படும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு முழுமையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளது. புதுச்சேரியில் அதிமுக வெற்றிபெற்றால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற நாடாளுமன்றத்தில் அழுத்தம் தரப்படும்’ என கூறினார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை ஏப்ரல் இறுதியில் பிசிசிஐ அறிவிக்கும் எனத் தெரிகிறது. உலகக் கோப்பைக்கான தங்கள் வீரர்களை அறிவிக்க ஐசிசி மே 1 வரை அவகாசம் அளித்துள்ளது. அதற்கு முன்பாகவே இந்திய அணி தங்கள் வீரர்களை அறிவிக்கும் எனத் தெரிகிறது. ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. யாரெல்லாம் அணியில் இடம் பிடிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையா? என பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “அரசியல் ரீதியாக திமுகவை பலகீனப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். பாஜகவில் வாரிசு அரசியல் அதிகம் இருக்கிறது. எடியூரப்பா மகன் தான் கர்நாடக பாஜக தலைவர். வாரிசு அரசியல் என்பது திமுகவை எதிர்கொள்ள முடியாதவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு” என்றார்.
ஃபாஸ்டேக் (Fastag) கணக்குகளில் KYC-யை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் (மார்ச் 31) முடிவடைகிறது. முன்னர் பிப்.29 வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. ‘ஒரே வாகனம், ஒரே Fastag’ என்ற திட்டத்தின் மூலம், ஒரே Fastag-ஐ பல வாகனங்களுக்கு பயன்படுத்துவது, ஒரே வாகனத்திற்கு பல Fastag-களை பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். உடனே KYC அப்டேட் பண்ணுங்க.
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸுக்கு எதிராக போட்டியிடும் 5 ஓபிஎஸ்களுக்கு ,1. திருமங்கலம் ஒ.பன்னீர்செல்வம் – வாளி, 2. ராமநாதபுரம் ஒ.பன்னீர் செல்வம் – கண்ணாடி டம்ளர், 3. கங்கைகொண்டான் ம.பன்னீர் செல்வம் – பட்டாணி, 4. சோலையழகுபுரம் ஒ.பன்னீர் செல்வம் – திராட்சை, 5. உசிலம்பட்டி ஒ.பன்னீர்செல்வம் – கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பால் நேற்றிரவு காலமான நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவிற்கு மநீம தலைவர் கமல் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, “இளவயது மரணங்களின் வேதனை பெரிது. கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி” என X தளத்தில் பதிவிட்டுள்ளார். டேனியல் பாலாஜி, கமலுடன் இணைந்து வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்திருந்தார்.
லக்னோவில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் பூரண் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் கே.எல்.ராகுல் கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக விளையாடுவார். புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி 5ஆவது இடத்திலும், லக்னோ அணி கடைசி இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்?
இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளா். இது தொடர்பாக பேசிய அவர், “பாஜக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் அடிமையாக அந்த அமைப்பு இருந்து வருகிறது. இந்த தேர்தல் மக்களுக்கும், பாஜகவுக்கும் நடக்கிற சுதந்திரப் போர். இதில் மக்கள் நிச்சயம் வெல்வார்கள்” என்றார்.
Sorry, no posts matched your criteria.