India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்திப்பதுடன் 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும் என பாஜக நிர்வாகி ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது, ஒருவேளை அதிமுக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தொடர்வாரா என்பது சந்தேகம் தான் எனக் கூறிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒன்றரை கோடி வாக்குகளை அதிமுக வாங்கியதா எனவும் கேள்வி எழுப்பினார்.
மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் ஓட்டேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. வேட்டையாடு விளையாடு, வடசென்னை படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றிருந்தார் டேனியல் பாலாஜி. அவரது உடல் புரசைவாக்கம் வீட்டிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஓட்டேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து காற்றோடு காற்றாக அவர் மறைந்ததாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக ரயில்வே ஊழியர்கள் தபால் ஓட்டு போட முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அருகில் உள்ள கேரளா, கர்நாடகா மாநில ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழக ஊழியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் ஆணையம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
பாஜகவின் சர்வாதிகாரப்போக்கின் மீது ஒட்டுமொத்த மக்களும் கடும் கோபத்தில் உள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடே தூக்கத்தை தொலைத்தது. தமிழ்நாட்டில் பாஜக பரிதாப நிலையில் உள்ளது. தோல்வி பயத்தால் நிர்மலா சீதாராமன் போன்றோர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டனர்” என்றார்.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் ஈரோடு, சேலம், கரூர், தருமபுரி, வேலூர், திருச்சி, திருத்தணி, மதுரை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் வெயில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் பகல் 12-3 மணி வரை அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள 490 இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிஇ அல்லது பிடெக் முடித்த 27 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். GATE-2024 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான இணையதளம்: <
விண்ணப்பிக்க கடைசி நாள்: 1 மே 2024
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நிதானமாக ஆடிவரும் லக்னோ வீரர் டி காக் அரை சதம் கடந்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர் தற்போது வரை 54* ரன்கள் அடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இது இவருக்கு முதலாவது அரை சதமாகும். மறுபுறம் அதிரடியாக ஆடிவரும் பூரண் 25* ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்போது வரை LGS அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை, அவரது வீட்டில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் சந்தித்து பேசினார். பின்னர் பேசிய அவர், ‘ஜார்க்கண்டில் 2 மாதங்களுக்கு முன் நிகழ்ந்தது இப்போது டெல்லியில் நடந்திருக்கிறது. சுனிதா கெஜ்ரிவாலை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். துயரத்தை பகிர்ந்துகொண்டேன். எங்கள் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசித்தோம் என்றார்.
மோடியா லேடியா என ஜெயலலிதா கேட்டது போல், மோடியா எடப்பாடியா எனக் கேட்கும் தைரியம் இபிஎஸ்-க்கு உள்ளதா என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் சவால் விடுத்துள்ளார். மேலும், ஜெயலலிதாவைப் போல தனித்து தேர்தலை சந்திக்கும் துணிச்சல் இபிஎஸ்-க்கு உள்ளதா? என கேள்வி எழுப்பிய அவர், தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சி இருக்கவே இருக்காது என கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் மொத்தம் 950 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் 874 ஆண்கள் மற்றும் 76 பெண்கள் அடங்கும். தமிழகத்தில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.