India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெரும்பான்மையான விண்ணப்பங்கள் மகளிர் உரிமைத்தொகைக்காக வந்துள்ளன; தகுதியுள்ள அனைவருக்கும் ₹1,000 வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பாதியில் நிறுத்திவிடுவார்கள் என சிலர் அரசியல் உள்நோக்கத்தோடு பேசுகின்றனர். அதை பற்றி எல்லாம் கவலைப்பட போவதில்லை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் மகளிர் உரிமைத் தொகை தொடரும் என உறுதியளித்தார்.

TN-ல் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கொடுமையான செயல்; மக்கள் நடமாடும் இடங்களில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். DMK ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாக கூறும் அமைச்சர், சிறுமிகளுக்கு ₹104 கோடி இழப்பீடு வழங்கியதை பெருமையாக கூறலாமா என கேள்வி எழுப்பினார்.

உலகில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பல இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு மீறி சென்றால் நீங்கள் வீடு திரும்புவது கடினம் தான் என்கின்றனர். அப்படி டாப் சீக்ரெட்டாக இயங்கும் அந்த இடங்கள் என்னென்ன என்பதையும், அதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. அனைவருக்கு இந்த சுவாரஸ்ய தகவலை SHARE பண்ணுங்க.

தனுஷ், அபிநய் இருவரும் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில்தான் சினிமாவில் நுழைந்தனர். <<18247782>>நடிகர் அபிநய்<<>> வாழ்க்கையில் பல போராட்டங்களுக்கு இடையே 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், விளம்பரங்களில் நடித்து புகழ் பெற்றார். ஆனாலும், அவரது கடைசி காலம் கசப்பாகவே அமைந்தது. சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிப்பால் உடல் மெலிந்தார். சிகிச்சைக்காக தனுஷ் உள்ளிட்டோர் உதவி அளித்தும் பலனளிக்காமல் மறைந்துவிட்டார். #RIP

டிரம்ப் குறித்த ஒரு ஆவணப்படத்தால், BBC 2 உயர் அதிகாரிகளை இழந்துள்ளது. டிரம்ப் 2021-ல் ஆற்றிய உரை, கேபிடல் ஹில் கலவரத்தை தூண்டும் விதமாக இருந்ததாக BBC ஆவணப்படம் வெளியிட்டது. ஆனால், 2 உரைகளை எடிட் செய்து தவறான பிம்பத்தை ஏற்படுத்தியதாக டிரம்ப் குற்றம்சாட்டிய நிலையில் விசாரணையில் நிரூபணமானது. இதற்கு பொறுப்பேற்று BBC டைரக்டர் ஜெனரல் டிம் டேவி, செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ராஜினாமா செய்துள்ளனர்.

பிரபல நடிகர் <<18247739>>அபிநய் <<>>இன்று காலமானார். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமான அவர், ஜங்ஷன், சிங்காரச் சென்னை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பிறகு தாஸ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘துப்பாக்கி’ படத்தில் வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணி குரலும் கொடுத்தார். பிரபலமான 3 Roses, Oreo விளம்பரங்களிலும் அபிநய் நடித்துள்ளார்.

அதிமுக தலைமை வகிக்கும் NDA கூட்டணியில் மீண்டும் இணையப்போவதில்லை என டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், ரோட்டில் கடை போட்டு கூவிக் கூவி அழைப்பது போல கூட்டணிக்கு அழைக்கும் நிலையில் EPS உள்ளதாக சாடினார். மேலும், விஜய்யை கூட்டணிக்கு வரவில்லை என்றால் கட்சி(தவெக) அழிந்துவிடும் என சிலர் மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று பிரபலமாக இருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள பிராண்டுகள் அனைத்தும் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, தொடங்கப்பட்டு விட்டன. இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பலதும் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருள்களாகும். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். மேலே குறிப்பிடப்பட்டதில், உங்களுக்கு மிகவும் பிடிச்சது எது?

இந்தியா – பாக்., போரை நிறுத்திய டிரம்புக்கு பாக்., PM ஷெபாஸ் ஷெரீஃப் மீண்டும் நன்றி கூறியுள்ளார். டிரம்ப்பின் துணிச்சல், உறுதியான தலைமையினால்தான் இந்தியா – பாக்., இடையிலான போர் தவிர்க்கப்பட்டு, பல லட்சம் மக்களின் உயிர் காக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஆனால், டிரம்பின் தலையீட்டால் போர் நிறுத்தம் என்ற வாதத்திற்கு இந்தியா தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விரக்தியின் உச்சத்தில் இருப்பதால்தான் ஆர்.பி.உதயகுமார் தன்னை விமர்சிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார் மனநலம் குன்றியவர் போல பேசுவதாக கூறிய அவர், அதனால் பாவம் அவருக்காக நான் வருத்தப்படுகிறேன் என கிண்டலடித்துள்ளார். மேலும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றுதான் பாஜக முயற்சிப்பதாகவும், கட்சியை பிரிக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.