India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிரஜ்வல் தவறு செய்திருந்தால் அவனை தூக்கில் போடுங்கள் என பிரஜ்வாலின் தந்தையும், ஜேடியு எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா கூறியுள்ளார். பிரஜ்வல் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சட்ட மன்றத்தில் பேசிய ரேவண்ணா, இந்த விவகாரத்தில் கர்நாடக டிஜிபி மீது அலோக் மோகன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் ஏற்கெனவே குழு உறுப்பினராக உள்ளனர். திருத்தப்பட்ட அமைப்புக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ரோஹித், கோலி மற்றும் பும்ராவை இலங்கைக்கு எதிரான ODI தொடரில் பங்கேற்க பயிற்சியாளர் காம்பீர் அழைப்பு விடுத்துள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்தியா குறைவான ODI போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளதால், இலங்கைக்கு எதிராக மூவரையும் களமிறக்க அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. கம்பீரின் கோரிக்கையை ஏற்று மூவரும் இலங்கை தொடரில் விளையாடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜூலை – 17 | ஆனி – ஆடி 1
▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM, 04.45 PM – 05.45 PM
▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM, 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:30 AM
▶குளிகை: 10:30 AM – 12:30 PM
▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶திதி : சூன்ய

ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து நிர்வாகிகள் ஒற்றுமையை கற்று வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். செய்தியை திறம்பட தெரிவிப்பதிலும், அமைப்பை விரிவுபடுத்துவதிலும் ஆர்எஸ்எஸ் திறம்பட செயல்படுவதாக கூறிய அவர், காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதை பின்பற்றி கட்சியை வளர்க்க வேண்டும் என்றார். ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமையான மனநிலையில் இருந்ததாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் எதைப் பற்றியும் சிந்திக்காமல், அடுத்த 5 ஓவர்களில் வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே சிந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். பதட்டம் அடையாமல் அனைவரும் இருந்ததால் மட்டுமே கோப்பையை கைப்பற்ற முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணை வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், இந்த கொலையில் அரசியல் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தை இது உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியம் எனவும் கூறியுள்ளார்.

கம்பீரின் ஆக்ரோஷ மனப்பான்மை இந்திய அணிக்கு உதவும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். கம்பீர் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் மிக சிறப்பாக செயல்படும் ஆற்றல் உடையவர் என்ற கூறிய அவர், கேகேஆர் அணியை வழிநடத்தி, அந்த அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்ததே அதற்கு சிறந்த உதாரணமாகும் என்றார். இந்திய அணி, தற்போது பாதுகாப்பாக கம்பீரின் கைகளில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

➤ தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள், அதிலிருந்து தான் வெற்றிக்கான வழி கிடைக்கும் ➤ இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளி தான் ➤ ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான். ➤ சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 4.83% கூடுதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ள அவர், மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மக்களுக்கு தலையில் அரசு சுமையை ஏற்ற கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.