India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2024-25 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) விகித மதிப்பீட்டை 6.8% இலிருந்து 7% ஆக IMF உயர்த்தியுள்ளது. அதன் அறிக்கையில், நுகர்வு, குறிப்பாக நாட்டின் கிராமப்புறங்களில் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமையுமெனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், உலகப் பொருளாதார வளர்ச்சி 3.2% ஆக இருக்குமெனவும் கணித்துள்ளது.

அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு பயணத்தை சசிகலா இன்று தொடங்குகிறார். அக்கட்சியை ஒன்றிணைக்க பயணம் தொடங்க போவதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, தென்காசியில் பயணத்தை தொடங்கும் சசிகலா, 4 நாள்கள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக பயணம் செய்கிறார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க கோரிக்கை எழுந்துவரும் நிலையில், அவரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் இன்று அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, சென்னையில் இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுகிறது.

இந்திய ரயில்வேயின் (மத்திய) பிரிவு 2,424 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்கீழ், பல்வேறு பணிகளுக்கு அப்ரென்டிஸ் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியும், வயது வரம்பு 15-24 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC-ST பிரிவினருக்கு 5 ஆண்டு, OBC பிரிவினருக்கு 3 ஆண்டு சலுகை உண்டு. rrccr.com இணையதளத்தில் ஆகஸ்ட் 15வரை விண்ணப்பிக்கலாம்.

பிட்டர், வெல்டர், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், டர்னர், லேபரெட்டரி அசிஸ்டென்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ப்ரோக்ராம் அசிஸ்டென்ட், ப்ரோக்ராமிங் அண்ட் சிஸ்டம் அட்மினிஸ்டிரேஷன் அசிஸ்டென்ட், மெக்கானிக் மெஷின் டூல்ஸ் மெயின்டனன்ஸ் இடங்களுக்கு அப்ரண்டிஸ் முறையில் ஆட்களை மத்திய ரயில்வே தேர்வு செய்கிறது. தேர்வானோர் மும்பை, புனே, நாக்பூர், சோலாப்பூரில் பணியமர்த்தப்படுவர்.

இந்திய ரயில்வேயின் (மத்திய) பிரிவில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள 2,424 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி எனத் தெரிந்து கொள்வோம். https://rrccr.com/ என்ற இணையதளம் செல்ல வேண்டும். பிறகு அங்குள்ள ‘Click here to Apply Online !!’ என்பதை அழுத்த வேண்டும். ஏற்கெனவே இருக்கும் Registration ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்து விவரங்களை ஆவணங்களுடன் ₹100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

33ஆவது ஒலிம்பிக் திருவிழா வரும் 26ஆம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அந்நாட்டில் சுமார் 400 நகரங்களில் ஒலிம்பிக்ஸ் ஜோதி ஓட்டம் அங்கு நடைபெறுகிறது. அதில் ஒருவராக ஈழத்தமிழரான தர்ஷன் செல்வராஜா இந்த வாய்ப்பை பெற்றார். தொழில்முறை செஃப்பான அவர் சிறந்த பகெத் (Baguette) உருவாக்க போட்டியில் அவர் முதலிடம் பிடித்ததற்காக கௌரவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆலயங்களில் விநாயகருக்கு முதல் பூஜை செய்யப்படும் நிலையில், சென்னிமலை முருகன் கோயிலில் மூலவர் முருகனுக்கு முதலில் நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். முருகன் ஞானப்பழத்தால் கோபித்து வந்து மலைமேல் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் வகையில் இவ்வாறு நடக்கிறது. 2 திருமுகங்கள், 8 திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தரும் சிறப்பு இந்த கோயிலுக்கு கூடுதல் சிறப்பை தருகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக 1,000 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில் 1,768 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி நடக்க உள்ள இத்தேர்வை, 26,510 பேர் எழுத உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.