News July 17, 2024

விரைவில் FAME-3 திட்டம் அமலுக்கு வரும்: குமாரசாமி

image

எலக்ட்ரிக் & ஹைபிரிட் வாகனங்கள் தயாரிப்பை ஊக்குவிக்க கொண்டுவரப்பட்ட FAME-3 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் H.D.குமாரசாமி தெரிவித்தார். FAME-3ஐ நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து அமைச்சகங்களிடமிருந்து பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஹைபிரிட் வாகனங்களின் வரி குறைப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.

News July 17, 2024

JUST IN: ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிர்ச்சித் தகவல்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் வங்கிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். இவ்வழக்கில் கைதான 11 பேரில், ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில், கைதானவர்களுக்கு பெண் ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து ₹50 லட்சம் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

News July 17, 2024

முறைத்து பார்த்ததால் மனைவியை கொன்ற கணவர்

image

உத்தரப் பிரதேசத்தில் முறைத்து பார்த்ததால் மனைவியை கணவர் கொலை செய்துள்ளார். சச்சின் வால்மிகியும், மனைவி மஞ்சு தேவியும் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வந்தனர். மனைவி அடிக்கடி செல்ஃபோன் பேசியதால் வால்மிகி சந்தேகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், வால்மிகியை மஞ்சு முறைத்து பார்த்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மஞ்சுவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவர் போலீசில் சரணடைந்தார்.

News July 17, 2024

அயோத்தி செல்லும் தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு..

image

ராமேஸ்வரம்- அயோத்தி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மண்டபத்திலிருந்து 28ஆம் தேதி இரவு 12.30 மணிக்கு புறப்படும் அயோத்தியா கண்டோன்மென்ட் ஸ்ரத்தா சேது அதிவிரைவு (22613) ரயில், செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர், கூடூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. எழும்பூரில் ரயில் நிற்காது. அதற்கு பதில் பெரம்பூரில் மதியம் 1.35 மணிக்கு நிற்கும் என கூறியுள்ளது.

News July 17, 2024

ஒரு கிராம் தங்கம் விலை ₹7,000-ஐ நெருங்கியது

image

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹360 உயர்ந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹720 உயர்ந்து ஒரு சவரன் ₹55,360க்கும், கிராமிற்கு ₹90 உயர்ந்து ஒரு கிராம் ₹6,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமீப மாதங்களாக இல்லாத அளவுக்கு சவரன் ₹55,000ஐ கடந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ₹7,000ஐ நெருங்கியுள்ளது.

News July 17, 2024

இனி கர்நாடகாவில் கன்னடர்களுக்கே 100% வேலை!

image

கர்நாடகாவில் கன்னடர்களை 100% கட்டாயம் பணியமர்த்த வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா 2024’ என்ற இம்மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது சட்ட அங்கீகாரம் பெற்றால், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் ‘குரூப் சி & டி’ பதவிகளில் கன்னடர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

News July 17, 2024

தடுப்பூசியை தவறவிட்ட 16 லட்சம் குழந்தைகள்: WHO

image

2023இல் இந்தியாவில் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என WHO தெரிவித்துள்ளது. அதன் தரவின்படி, 9 மாதம் அல்லது 12 மாதங்களில் செலுத்தப்படும் ‘MCV1’ தடுப்பூசியை 15,92,000 குழந்தைகள் தவறவிட்டுள்ளதாக அறியமுடிகிறது. அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் நைஜீரியாவுக்கு (21 லட்சம்) அடுத்து 2ஆம் இடத்தில் இந்தியா உள்ளது.

News July 17, 2024

பலதார திருமணம் தீவிர குற்றம்: உச்சநீதிமன்றம்

image

பலதார திருமணத்தை தீவிர குற்றமாக தீர்ப்பளித்து, தமிழக தம்பதிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து SC உத்தரவிட்டுள்ளது. 2ஆவது திருமணம் செய்த மனைவி மீதும், 2ஆவது கணவர் மீதும் முதல் கணவர் தொடுத்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இதை ரத்து செய்த ஐகோர்ட், விசாரணை முடியும் வரை மட்டும் சிறையிலிருக்க ஆணையிட்டது. இதை எதிர்த்த மனுவில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

News July 17, 2024

சென்னை- மதுரை வைகை விரைவு ரயில் சேவை மாற்றம்

image

சென்னை எழும்பூர் -மதுரை வைகை விரைவு (12635) ரயில் சேவை 9 நாள்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. தாம்பரத்தில் பராமரிப்பு நடைபெறுவதால் வருகிற 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து ரயில் புறப்படும். எழும்பூர்- திருச்சி இடையேயான ராக்போர்ட் விரைவு (12653) ரயில் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

News July 17, 2024

எண்ணெய் டேங்கர் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் மாயம்

image

ஓமன் கடற்கரையில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உட்பட 16 பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர். கொமோரோஸ் – கொடியிடப்பட்ட எண்ணெய் டேங்கர் ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் டுக்ம் துறைமுகத்திற்கு அருகில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணியில், சுல்தானட்டின் கடல்சார் பாதுகாப்பு மையத்தின் மீட்பு பணி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

error: Content is protected !!