India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடிகை பிரியங்கா மோகனுக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி காத்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படங்களில் நடித்து முடித்துவிட்டார். தமிழ், மலையாளத்தில் கதைகளைக் கேட்ட அவருக்கு, ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சொன்ன ஒன் லைன் பிடித்து போனதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக முழு ஸ்க்ரிப்ட்டையும் கொடுக்க முடியுமா என அவர் கேட்டுள்ளாராம்.

BSP தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விவாதங்களில் ஆருத்ரா நிறுவனத்தின் பெயர் அடிபடுகிறதென விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஆருத்ராவுக்கும் பாஜகவுக்குமான தொடர்பு, ஆருத்ரா – ஆம்ஸ்ட்ராங் கொலை இடையிலான தொடர்பு விசாரிக்கப்படாமல் எந்தத் தீர்வையும் காண முடியாதெனக் கூறிய அவர், அந்த படுகொலைக்கு பின்னணியில் உள்ள மாஸ்டர் மைண்ட் யாரென்று கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்றார்.

ஆன்லைன் டெலிவரி தளங்கள் மூலம் மதுபானங்களை விற்கும் முடிவுக்கு ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பீர், ஓயின் போன்ற இலகுரக மதுபானங்களை வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்ய ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மாநில அரசுகளும் அந்நிறுவனங்களுடன் ஆலோசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

அமெரிக்காவின் மில்வாக்கியில் முகமூடி அணிந்த 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ட்ரம்பின் விருந்து நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில், ஒருவர் சுற்றிக் கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர். இதையடுத்து, அந்நபரை சோதனை செய்தபோது, அவரிடம் ஏ.கே.47 துப்பாக்கி இருந்தது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து, அவரிடம் இருந்த ஆயுதத்தைக் கைப்பற்றி அவரை கைது செய்துள்ளனர்.

முன்பின் தெரியாத பெண்ணின் பெயர், செல் எண் கேட்பது சரியில்லை என்றபோதிலும், அது பாலியல் துன்புறுத்தல் குற்றமாகாது என்று குஜராத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பெண் ஒருவர், சமீர் ராய் என்பவர் தனது பெயர், செல் எண், முகவரி கேட்பதாக அளித்த புகாரில், IPC 354ஆவது பிரிவின்கீழ் (பாலியல் துன்புறுத்தல்) போலீஸ் வழக்குப்பதிந்தது. இதை எதிர்த்த மனுவை விசாரித்த ஐகோர்ட், அந்த வழக்கு மீது இடைக்கால தடை விதித்தது.

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார்- 2 திரைப்பட படப்பிடிப்பு, சென்னை சாலிகிராமம் அருகே தனியார் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. இதில் 20 அடி உயரத்தில் ஏழுமலை என்ற சண்டை கலைஞர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மேலிருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் நெஞ்சு மற்றும் நுரையீரல் பகுதியில் பலத்த காயமடைந்து ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024- 2025 நிதியாண்டில் உலகின் முன்னணி நாடுகளின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு இருக்கும்
என, சர்வதேச நிதியம் கணித்துள்ளது. அதன்படி, அமெரிக்கா 2.6 %, சீனா 5 %, பிரான்ஸ் 0.9 %, ஜெர்மனி 0.2%, பிரிட்டன் 0.7, ஜப்பான் 0.7%, ரஷ்யா 3.2 %, பிரேசில் 2.1 %, சவுதி அரேபியா 1.7 %, கனடா 1.3 %.

தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ₹2 கோடி IRDAI அபராதம் விதித்துள்ளது. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையிலான கணக்குகளை IRDAI ஆய்வு செய்துள்ளது. அப்போது அந்நிறுவனம் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலா ₹1 கோடி விதம் 2 பகுதிகளாக அந்நிறுவனத்திற்கு IRDAI அபராதம் விதித்துள்ளது.

தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான சட்டவிரோத போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா உடனான உறவை இந்தியா பயன்படுத்த வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்நாட்டு செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர், ஐ.நா. சாசனம், உக்ரைனின் பிராந்திய ஒற்றுமை, இறையாண்மை, மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினிடம் இந்தியா அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.