News July 18, 2024

இறுதிக்கட்டத்தில் ‘Thug Life’ படப்பிடிப்பு!

image

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ‘Thug Life’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் சிம்பு மற்றும் துணை கதாபாத்திரங்களுக்கு இடையேயான காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பாதத்தில் எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் ஜோஜூ ஜார்ஜ், தான் சம்பந்தப்பட்ட மீதமுள்ள காட்சிகள் நடித்துக்கொடுக்க திட்டமிட்டுள்ளார். ஆகஸ்டில் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் எனத் தெரிகிறது.

News July 18, 2024

காவிரியில் 70,000 கன அடி நீர் வெளியேற்றம்

image

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 70,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவரும் நிலையில், அந்த அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 65,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து உயர்ந்துள்ளது.

News July 18, 2024

விஜய் பட ஹீரோயினுக்கு இன்று 42ஆவது பிறந்தநாள்

image

முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் நடிப்பில் 2002இல் வெளியான தமிழன் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து பாலிவுட்டில் தடம் பதித்த அவர், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், 2018இல் அமெரிக்காவை சேர்ந்த நிக் ஜோனாசை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அவர் இன்று 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

News July 18, 2024

APPLY: தேசிய அனல்மின் நிலையத்தில் வேலை வாய்ப்பு

image

தேசிய அனல்மின் நிலையத்தில் (NTPC) 140க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மைனிங் ஓவர்மேன், மேகஜின் இன்சார்ஜ், மெக்கானிக்கல் சூப்பர்வைசர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5 கடைசி நாள் என்றும், விருப்பமுள்ளவர்கள் <>https://ntpc.co.in./jobs-ntpc <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

த.மா.கா.வில் இருந்து நீக்கப்பட்டார் ஹரிஹரன்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரன் த.மா.காவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், த.மா.கா. மாநில மாணவரணி துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஹரிஹரன் நீக்கப்படுவதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். முன்னதாக, அதிமுகவில் இருந்து மலர்க்கொடியை நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 18, 2024

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

image

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஒட்டுமொத்த தேர்வு முறையையும் எந்த வகையில் பாதித்தது என்ற காரணங்களைக் கூற வேண்டும் எனக் கூறிய நீதிமன்ற அமர்வு, இளங்கலை மருத்துவக் கல்விக்கான நீட் தகுதி தேர்வில் பெருமளவு முறைகேடுகள் நடந்தது என தெரிந்தால்தான் மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும் எனத் தெரிவித்துள்ளது.

News July 18, 2024

மின் மீட்டர் மாற்ற சேவை கட்டணங்களும் அதிகரிப்பு

image

மின் மீட்டர் மாற்ற சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி சிங்கிள் பேஸுக்கான மீட்டர் மாற்ற சேவை கட்டணம் ₹1,020இல் இருந்து ₹1,070ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ட்ரிபிள் பேஸுக்கான சேவை கட்டணம் ₹1,535இல் இருந்து ₹1,610ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மீட்டர் கட்டணம் வராது. அதை தனியே செலுத்த வேண்டும். மறு இணைப்பு சேவை கட்டணம் ₹125இல் இருந்து ₹130ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

ஊழல் வழக்கில் ஆளுங்கட்சி எம்.பி., குற்றவாளி

image

ஊழல் வழக்கில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சி எம்.பி., பாப் மெனண்டெஸ் (70) குற்றவாளி என்று நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்களிடம் ₹4 கோடி பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், பாப்பை குற்றவாளி என நீதிமன்றம் உறுதிசெய்தது. அவருக்கான தண்டனை சில நாட்களில் அறிவிக்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News July 18, 2024

நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி

image

சர்தார் -2 திரைப்பட படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி கண்ணீர் மல்க உருக்கமாக அஞ்சலி செலுத்தினார். புது வண்ணாரப்பேட்டையில் உள்ள ஏழுமலை இல்லத்திற்கு நேரில் சென்ற கார்த்தி, அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News July 18, 2024

முடி உதிர்வை வெங்காயம் தடுக்குமா?

image

சின்ன வெங்காயத்தை அரைத்துப் பூசினால் வழுக்கைத் தலையில்கூட முடி வளரும் என்று சொல்லப்படுவதை அரோமாதெரபிஸ்ட்டுகள் முழுமையாக மறுத்துள்ளனர். கந்தகத்தன்மை (சல்ஃபர்) அதிகமுள்ள சின்ன வெங்காயத்தின் சாற்றை தலைமுடியில் பூசினால், முடி மெலிந்து, உடையும் என்கிறார்கள். மேலும், தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்ப் பசையை அகற்றி, வறண்டுபோக செய்து, முடி உதிர்வு & வழுக்கை பாதிப்பை மோசமாக்கும் என எச்சரிக்கின்றனர்.

error: Content is protected !!