India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜி ஆக்ரோஷமாக செயல்படக்கூடிய வீரர் என்று இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா புகழாரம் சூட்டியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டி களிமண் தரையில் நடைபெறும் என்பதால், ஸ்ரீராம் பாலாஜி தனக்கு பொருத்தமான இணையாக இருப்பார் எனக் கூறிய அவர், பெரிய இணைகளுக்கு சவால் அளிக்க போதுமான திறமை தங்களிடம் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட 10 நாடுகள் குறித்து ஐநாவின் உலக மக்கள்தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தற்போது இங்கு காணலாம் 1) இந்தியா- 145 கோடி 2) சீனா – 141 கோடி 3) அமெரிக்கா – 34 கோடி 4) இந்தோனேசியா – 28 கோடி 5) பாகிஸ்தான் – 25 கோடி 6) நைஜீரியா – 23 கோடி 7) பிரேசில் – 21 கோடி 8) வங்கதேசம் – 17 கோடி 9) ரஷ்யா – 14 கோடி 10) எத்தியோப்பியா – 13 கோடி.

தொழில் தொடங்க விரும்புவோருக்கு, பிரதான் மந்திரி ரோஜ்கர் யோஜனா (PMRY) திட்டம் மூலம் 12%-15.5% வட்டியில் ₹10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 18-35 வயதுடன் (SC, ST, பெண்களுக்கு 45 வயது வரை), 8ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ₹1 லட்சம் வரை. ஆதார் அட்டை, தொழில் பயிற்சி சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் வங்கிகளில் விண்ணப்பித்தால், 10%-20% மானியத்துடன் கடன் கிடைக்கும்.

நினைத்தேன் வந்தாய் படத்தின் ‘வண்ண நிலவே வண்ண நிலவே’ பாடல் ஞாபகம் இருக்கிறதா? 1998ஆம் ஆண்டு, விஜய், ரம்பா கூட்டணியில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதே கூட்டணி 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் திரையில் இல்லை., நிஜத்தில். நடிகை ரம்பா குடும்பத்துடன் இன்று விஜய்யை சந்தித்தார். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தனியார் துறையில் ’சி’ மற்றும் ’டி’ கிரேடு பதவிகளுக்கு 100% கன்னடர்களை பணியமர்த்த வேண்டுமென்ற மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த பதிவை அவர் நீக்கியுள்ளார். இந்நிலையில், நிர்வாக பணிகளில் 50%, நிர்வாகமற்ற பணிகளில் 70% இடஒதுக்கீடு தொடரும் என அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா – இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் ஜூலை 27ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஆனால், இப்போது வரை அணியின் கேப்டன் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்க இன்று மாலை நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை தேர்வாளர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கம்பீர் ஆலோசனை நடத்திய நிலையிலும் இலங்கை அணித் தேர்வில் இழுபறி நீடிக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் அம்மாவட்டத்தில் 21 செ.மீட்டருக்கு மேல் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைடுத்து, ஊட்டி, கூடலூர், மஞ்சூர், தேவாலா ஆகிய பகுதிகளில் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்

SBI வாடிக்கையாளர்கள், மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் தொகையை அறியும் சேவையை வீட்டிலிருந்தவாறே பதிவு செய்யும் முறை.
*SBI வங்கியில் பதிவு செய்துள்ள மொபைல் எண் மூலம் REG என டைப் செய்து, 092234 88888 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.
*10 நிமிடங்களில் உங்களது மொபைல் எண், மிஸ்டு கால் சேவையில் இணைக்கப்படும்.
*9223766666 என்ற எண் மூலம் பேலன்ஸ், 9223866666 என்ற எண் மூலம் கடைசி 5 பரிவர்த்தனை விவரங்களை அறியலாம்.

தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 88% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை சராசரியாக 8.5 செ.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால், இந்தாண்டு 16 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. ஜூன் மாதத்தில் 36 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக மழைப்பொழிவு பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ரஷ்மிகா மந்தனா. ‘இந்தியாவின் க்ரஷ்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர், திரையுலகின் பிஸியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் சிவப்பு ரோஜாக்களை தனது தலையில் சூடி எடுத்து, பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.