India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீர் கட்டு போன்ற சிறுநீரக பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் சுரைக்காய்க்கு உண்டாம். கோடையில் அதிகமாக கிடைக்கும் சுரைக்காயில் ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் இந்துப்பு, இஞ்சி, நெல்லி, புதினா இலைகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிவிடவும். பின்னர் அதில் வடிகட்டிய சுரைக்காய் ஜூஸை ஊற்றி, சிறிது சீரகம் & மிளகு பொடியை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு இன்று தேர்வுகள் நடைபெற உள்ளன. ஏப்.19ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், விடைத்தாள் மதிப்பீட்டை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 6ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் 17ஆவது சீசனில் அனுபவமிக்க கேப்டன் பட்டியலில், கொல்கத்தா அணியின் ஷ்ரேயஸ் ஐயர் (55) முதலிடம் பிடித்தார். லக்னோ கேப்டன் K.L.ராகுல் (51), ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் (45), மும்பை கேப்டன் பாண்டியா (31), பெங்களூரு கேப்டன் டூப்ளெசிஸ் (27), பஞ்சாப் கேப்டன் தவான் (22) ஆகியோர் இடம்பிடித்தனர். குஜராத்திற்கு கில், ஐதராபாத்திற்கு கம்மின்ஸ், சென்னைக்கு ருதுராஜ் கேப்டனாக அறிமுகமாகின்றனர்.
2ஜி வழக்கில், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிகோரும் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது. 14 பேரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிகோரி சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுக்கள் மீது இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் பாஜக நேரடியாக 19 தொகுதிகளில் களம் காண்கிறது. ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தமமுக, இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம், அதிமுக உரிமை மீட்புக்குழு ஆகிய கட்சிகள் தாமரை சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் போட்டியிடவுள்ளன. பாமக – 10, தமாகா – 3, அமமுக – 2 என தொகுதிகள் பிரித்தளிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று கட்சிகள் அவரவர் சொந்த சின்னத்தில் தேர்தலை சந்திக்கவுள்ளன.
உலகின் முன்னணி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். அதன் சேவை தற்போது பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோர் பலருக்கு அதன் கணக்கு தானாகவே லாக் அவுட் ஆகி வருகின்றன. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உங்களது கணக்கு வேலை செய்கிறதா?
விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனை வைத்து இயக்குநர் பொன்ராம் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட வெற்றி படங்களை தந்த பொன்ராம், சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்றே கூறலாம்.
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரத்யங்கரா தேவியை, ‘அதிஸௌம்ய அதி ரௌத்ராயை’ என ஞானநூல்கள் கூறுகின்றன. அதன் பொருள் ‘மென்மையானவள் அதேநேரம் மிகவும் உக்கிரமானவள்’ என்பதே ஆகும். அத்தகைய உக்கிர தெய்வங்களான பிரத்யங்கரா, துர்க்கை ஆகியோரை சிலை வடிவமாக (6 இன்ச் அளவில்) வீட்டில் வைத்து வணங்குவதில் தவறேதும் இல்லை. சாக்த விதிப்படி, தினமும் தீபம் ஏற்றி, மலர் சூட்டி, நிவேதனம் செய்து வழிபட்டால் தீயவை வீட்டை விட்டு விலகும் என்பது ஐதீகம்.
தமிழகத்தில் பாஜக தனித்துக் களம் காண இருப்பதால் டெல்லி தலைமை உற்சாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார். தேர்தலுக்கு முன் தமிழகத்திற்கு வருகை தர இருக்கும் அவர், நீலகிரி, பெரம்பலூர், கோவை, வேலூர் ஆகிய தொகுதிகளில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க இருக்கிறார். பாஜகவுக்கு இது பலனளிக்குமா?
Sorry, no posts matched your criteria.