News July 18, 2024

ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேறிய ஜெய்ஸ்வால்

image

டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் புதிய சர்வதேச தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், பேட்டர்கள் தரவரிசையில், இந்திய வீரர் யஷஸ்வி ஜெஸ்வால், 743 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் இருந்து ‘நம்பர்-6’ இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ‘டி-20’ போட்டியில் 141 ரன் விளாசினார். முன்னதாக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரை (716) தரவரிசையில் 6ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 18, 2024

ஏற்றுமதியில் அதிகரித்த தமிழகத்தின் பங்களிப்பு

image

2023-24 ஆம் நிதியாண்டில் நாட்டின் சரக்கு ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்களிப்பு 10% ஆக அதிகரித்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி., தமிழகம் ஆகிய 5 மாநிலங்களில், தமிழகம் மட்டுமே கடந்த நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த சரக்கு & சேவைகள் துறை ஏற்றுமதியில், அதன் பங்களிப்பை அதிகரித்துள்ளது. தொடர்ந்து 3 நிதியாண்டுகளாக தமிழகத்தின் பங்களிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News July 18, 2024

பாதுகாவலர்களை மாற்றிய சீமான்?

image

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருவித பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இனி மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்வதில்லை என்று அவர் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தனது பாதுகாப்பு பணியில் இருந்த நபர்களை மாற்றி விட்டு, புதியவர்களை அவர் நியமித்திருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News July 18, 2024

இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல் நாளை முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

News July 18, 2024

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 67 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, அதிமுக, பாஜக, பாமக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளன. நீதிபதி குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு முன்பு 36-வது வழக்காக அவை பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படுமா? என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

News July 18, 2024

அண்ணாமலையால் பறி போனதா அதிமுக வாக்குகள்?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. அதிமுக போட்டியிடாததால் அக்கட்சியினரின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என பாமக நம்பியது. ஆனால், அதிமுக வாக்குகள் திமுகவுக்கு சென்றன. இதற்கு இடைத்தேர்தல் நேரத்தில் அதிமுகவை அண்ணாமலை விமர்சித்ததே காரணம் எனவும், அவரது விமர்சனத்தால் அதிருப்தி அடைந்த அதிமுகவினர், பகை மறந்து திமுகவுக்கு வாக்களித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

News July 18, 2024

₹16க்கு BSNL டேட்டா திட்டம்

image

பொதுத்துறை நிறுவனம் Bsnl, மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் டேட்டா திட்டத்தை வழங்குகிறது. இதேபோல் தனியார் நிறுவனங்களும் மலிவு விலைகளில் டேட்டா திட்டம் அளிக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.
*Bsnl – ₹16- 2 ஜிபி டேட்டா
*Jio – ₹19 – 1 ஜிபி டேட்டா
*Jio – ₹29 – 2 ஜிபி டேட்டா
*Airtel – ₹22 – 1 ஜிபி டேட்டா
*Airtel – ₹33 – 2 ஜிபி டேட்டா
*Vi – ₹22 – 1 ஜிபி டேட்டா
*Vi -₹33 – 2 ஜிபி டேட்டா

News July 18, 2024

டி20: புதிய சாதனையை நோக்கி சூர்யகுமார்

image

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டி20 போட்டியில் மேலும் 160 ரன்கள் சேர்த்தால் 2,500 ரன்கள் குவித்த 3வது வீரர் என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார். இந்த பட்டியலில் ரோஹித் ஷர்மா முதலிடத்திலும், விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 2,500 ரன்கள் என்ற மைல் கல்லை ரோஹித் 2019இல் நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

News July 18, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
➤ மகாராஷ்டிரா என்கவுன்டரில் 12 மாவோயிஸ்டுகள் பலி
➤ அமித்ஷா உடன் ஆளுநர் ரவி ஆலோசனை
➤ டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி
➤ அஜித் பவார் கட்சி நிர்வாகிகள் விலகல்
➤ ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடு
➤ ஐசிசி தரவரிசையில் 3ஆவது இடத்தில் தீப்தி ஷர்மா

News July 18, 2024

டி20 தரவரிசை பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் SKY

image

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டும் (844 புள்ளி), 2வது இடத்தில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (797 புள்ளி), இங்கிலாந்தின் பில் சால்ட் (797 புள்ளி) உள்ளனர். இதையடுத்து 4 மற்றும் 5வது இடங்களில் முறையே பாகிஸ்தானின் பாபர் அசாம் (755 புள்ளி), முகமது ரிஸ்வான் (746 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!