India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆய்வக விலங்குகளின் ஆயுட்காலத்தை சுமார் 25% அதிகரிக்கும் மருந்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் பயன்படுத்த முடியும் என நம்பப்படுகிறது. இந்த மருந்து செலுத்தப்பட்ட எலிகள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த மருந்து தற்போது மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் நடந்துள்ளதாகவும், வஞ்சகம் செய்பவர் இந்துவாக இருக்க முடியாது எனவும் சங்கராச்சாரியார் பேட்டியளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி கங்கனா ரனாவத், கட்சியின் கூட்டணியில் ஒப்பந்தங்கள், பிளவுகள் இருப்பது மிகவும் சாதாரணமானது எனவும், அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானிப்பூரியா விற்பார்கள்? என கிண்டல் செய்துள்ளார்.

EMI மூலம் மொபைல் வாங்குவோருக்கு நிபுணர்கள் தரும் சில டிப்ஸ்
*வட்டி விகிதம், ப்ராசசிங் கட்டணம் ஆகியவற்றை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்
*கடன் வழங்கும் நிறுவனத்தின் பின்புலத்தை ஆராய வேண்டும்.
*பட்ஜெட்டுக்கு மீறி செல்ஃபோன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
*கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்முன், ஒருமுறை நன்கு படித்து பார்க்க வேண்டும். *மாதாந்திர EMIஐ சரியாக செலுத்தும் அளவுக்கு வருமானம் இருக்க வேண்டும்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கடந்தவாரம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவரது வலதுபக்க காது காயமடைந்தது. இதனையடுத்து அவர் பேண்டேஜ் அணிந்து பொதுக்கூட்டங்களில் தோன்றினார். இதற்கு ஆதரவளிக்கும் விதமாக குடியரசுக் கட்சி தொண்டர்களும் காதில் பேண்டேஜ் அணிந்துகொண்டு பிரசாரக் கூட்டங்களுக்கு வருகின்றனர். இதனால் காதில் பேண்டேஜ் அணிவது தற்போது அமெரிக்காவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில், 4 ஏ.சி. பெட்டிகள் உள்பட 12 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 4 பயணிகள் பலியான நிலையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயர்கல்வி நிறுவனங்களில் உடல் நலனுக்கு ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்ய தடை விதிக்க UGC அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், இந்தியாவில் நான்கில் ஒருவர் உடல் பருமன், சா்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதாக ICMR எச்சரித்துள்ளது. எனவே, மாணவர்களின் நலனுக்காக பீட்சா, பர்கர், சமோசா உள்ளிட்ட உடல்பருமனை அதிகரிக்கும் உணவு வகைகளை விற்க தடை விதிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகில் ஆசியா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என மொத்தம் 7 கண்டங்கள் உள்ளன. இதில் ஆசிய கண்டமே மிகப்பெரிய கண்டமாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய கண்டத்தை விட ஆசிய கண்டம் 5 மடங்கு பெரியது ஆகும். 7 கண்டங்களில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன. இதில் ரஷ்யாவே உலகின் மிகப்பெரிய நாடாகவும், க்ரீன்லாந்தே உலகின் மிகப்பெரிய தீவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில், கைது செய்யப்பட்ட அவர் தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில், ED வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அல்லி, ஜூலை 22ஆம் தேதி செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேகமான 50 ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து. தொடக்க வீரர் ஜாக் க்ராலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில் அடுத்த வீரர்கள் பென் டக்கெட், ஆலி போப் ஜோடி 4.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. முன்னாதாக 1994ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 4.3 ஓவர்களில் 50 அடித்திருந்தது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த ஆய்வறிக்கையை தேர்தல் பணிக்குழு அறிவாலயத்தில் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், விக்கிரவாண்டி அருகில் இருக்கும் இரு மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் முறையாக பணியாற்றவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமை என்ன முடிவெடுக்க போகிறதோ? என சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அச்சத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.