News July 18, 2024

பாஜகவிலிருந்து அஞ்சலை நீக்கம்

image

வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்து, அஞ்சலையை நீக்குவதாக பாஜக அறிவித்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய, BSP தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தனிப்படை போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதையடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டதால், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

News July 18, 2024

‘மகாராஜா’ படக்குழுவை வாழ்த்திய விஜய்

image

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டதோடு, வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

News July 18, 2024

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபம் 7.1% உயர்வு

image

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 7.1% உயர்ந்து, ₹6,368 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு ₹5,945 கோடியாக இருந்தது. வருவாயைப் பொறுத்தமட்டில், 3.6% அதிகரித்து, ₹37,933 கோடியிலிருந்து ₹39,315 கோடியாக உயர்ந்துள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கை 6.2% குறைந்து 3.15 லட்சமாக உள்ளது.

News July 18, 2024

மனைவியை பிரிந்துவிட்டதாக ஹர்திக் அறிவிப்பு

image

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது மனைவியை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். நடாஷா என்பவரை 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அவர், தனது விவகாரத்து முடிவு தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நானும் நடாஷாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்த கடினமான நேரத்தில் தங்களது தனியுரிமையை மதித்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 18, 2024

ஓரம் கட்டப்படும் ருதுராஜ் கெய்க்வாட்?

image

CSK அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கை தொடரின் டி20 அணி, ஒருநாள் அணி இரண்டிலுமே ருதுராஜின் பெயர் இடம் பெறவில்லை. நடந்து முடிந்த ஜிம்பாப்வே தொடரில் அவருக்கு துவக்க வீரராக விளையாட வாய்ப்பு கிடைக்காமல் 4ஆவது வீரராக களம் இறங்கினார். இவை யாவும் அவரது ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது.

News July 18, 2024

4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

image

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி, நாமக்கல், தி.மலை, புதுக்கோட்டை, காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சியாக்கவும், சென்னை காவல் சட்டங்களை, பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா உள்பட 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து புதிய திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

News July 18, 2024

துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்?

image

மக்களவைத் தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிறைவடைந்த நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

News July 18, 2024

ICCக்கு ₹167 கோடி இழப்பு?

image

ICC வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்காவில் நடத்தியதால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ₹167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மிக எதிர்பார்க்கப்பட்ட போட்டி உள்பட பல போட்டிகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

News July 18, 2024

FASTag சரியாக ஒட்டாவிட்டால் இரட்டை கட்டணம்

image

வாகனத்தில் FASTag-ஐ முறையாக பொருத்தாத பயனர்களிடம் இருந்து இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், சிலர் வாகன கண்ணாடிகளில் FASTag-ஐ முறையாக பொருத்தாததால் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தால், பிறருக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. இதனால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

News July 18, 2024

துணை கேப்டன் ஷுப்மன் கில்

image

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக ஷும்பன் கில் உருவெடுத்திருக்கிறார். ஜிம்பாப்வே தொடரை கேப்டனாக இருந்து வழிநடத்திய அவர், அடுத்துவரும் இலங்கை தொடரின் ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டிற்கும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கு ரோஹித்தும், டி20 தொடருக்கு சூர்யகுமாரும் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரே நபர் துணை கேப்டனாக இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

error: Content is protected !!