India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விதி மீறலில் ஈடுபட்டதாக KKR வீரர் ரமன்தீப் சிங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஐபிஎல் நடத்தை விதி 2.20இன் கீழ் ரமன்தீப் சிங் லெவல் 1 குற்றத்தைச் செய்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 20% அபராதம் செலுத்தும்படி நடுவர் உத்தரவிட்டார். இது KKR அணிக்கு விதிக்கப்படும் 2ஆவது அபராதம் ஆகும்.
சூரியப் புயல் பூமியைத் தாக்கும்போது காந்தவிசையின் காரணமாக அவை வட மற்றும் தென் துருவங்களை நோக்கி பாயும். முடிவில், அந்த இரண்டு துருவங்களிலும் வண்ணமயமான காட்சிகள் தோன்றும். அப்படியான ஒரு அதிசய நிகழ்வுதான் மூன்று நாள்களாக நிகழ்ந்து வருகிறது. 10ஆம் தேதி ஐரோப்பிய நாடுகளில் தெரிந்த இந்த ஆரோரா என்னும் வண்ண வானம், நேற்று இரவு நியூசிலாந்து நாட்டில் தென்பட்டது.
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஆக அதிகரித்துள்ளது. காபூல், பாஹ்லான் உள்ளிட்ட மாகாணங்களில் பெய்த கனமழையால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், நேற்று ஒரே நாளில் 200 பேர் உயிரிழந்த நிலையில், இன்று உயிரிழப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிக்காமல் ஐபிஎல் தொடர்களில் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேநேரம், நடப்பு தொடரிலேயே அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு ஓடமுடியாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு, அவரிடம் ஓய்வு குறித்து கேட்கையில், “ரசிகர்களை குஷிப்படுத்த விளையாடுவேன்” என்று கூறினார். இந்த ஆண்டு அவர் என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸுக்கு, தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இபிஎஸ் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், இபிஎஸ்ஸுக்கு வாழ்த்து கூறியுள்ளார். முன்னதாக, அவர் ஸ்டாலின், அன்புமணி ஆகியோருக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.
மறைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கடைசியாக வாங்கிய டார்ச் லைட், அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. முழுவதும் எரிந்த நிலையில் டார்ச்லைட் மீட்கப்பட்டதால், அது தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. அவர் கடைசியாக டார்ச்லைட் வாங்கிய சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியானது. முன்னதாக, அவரது வீட்டில் கிடைத்த டார்ச்சையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்தனர்.
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி, YSR காங்கிரஸ், காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. தெலுங்கு தேசம் கூட்டணியில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இடம்பெற்றுள்ளன. முதல்வரும், YSR காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாதான், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்.
சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சென்னை மைதானத்தில் இன்று கடைசி போட்டியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. லீக் தொடரில் சென்னை மைதானத்தின் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. ஒருவேளை CSK அணி, ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையாவிட்டால் நடப்பு தொடரில் இதுவே கடைசி போட்டியாக அமையும். தோனி ஓய்வை அறிவித்தால் இன்றுதான் அவருக்கு சென்னையில் கடைசி போட்டியாக இருக்கும்.
அன்னையர் தினத்தில் பார்க்க வேண்டிய உணர்வுப்பூர்வமான தமிழ் படங்கள்: ▶தியாகராஜன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அன்னை ஓர் ஆலயம்’, ▶மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ▶அமீர் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘ராம்’, ▶சசிகுமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’, ▶மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் நடித்த ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ▶தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி’.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பாபா ராம்தேவ் புகழ்ந்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராகுலின் உடற்தகுதி குறித்து அவர் பாராட்டி பேசுகிறார். இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்போவதை உணர்ந்து, ராகுலை பாஜக ஆதரவாளரான பாபா ராம்தேவ் பாராட்டியுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வீடியோவை ஆராய்ந்ததில், அது பழைய வீடியோ எனத் தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.