News July 19, 2024

17,727 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு 24.7.2024-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SSC CGL-2024 மொத்தம் 17,727 காலிப் பணியிடங்கள். ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள் 25.7.24. விண்ணப்பத் திருத்தம் செய்ய கால அவகாசம் ஆகஸ்ட் 10 &11. முதல்நிலை கணினி வழி தேர்வு: செப். – அக்டோபர், இரண்டாம் நிலை கணினி வழி தேர்வு: டிசம்பர். மேலும், விவரங்களை <>ssc.gov.in<<>> இல் பார்க்கவும்.

News July 19, 2024

நீலகிரி: 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக, 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் தாலுகாக்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை 3ஆவது சனிக்கிழமை என்பதால், தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 19, 2024

வங்கதேச கலவரத்தில் 39 பேர் பலி

image

வங்கதேசத்தில், மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் கலவரமாக மாறியதில் இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர். அரசுப் பணிக்கான இடஒதுக்கீட்டில் சீர்த்திருத்தம் கோரி, ஜூலை 15 முதல் போராடும் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இதனால் அங்கு கலவரம் மூண்டதுடன் அசாதாரண சூழல் நிலவுவதால், இந்தியா, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாட்டவர்கள், எல்லை வழியாக சொந்த நாடுகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

News July 19, 2024

ஸ்காட்லாந்தில் முதுகலை படிப்பை முடித்த சனுஜா

image

பீமா, ரேணிகுண்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் நடிகை சனுஜா. கடைசியாக அவர் ‘கொடிவீரன்’ படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முதுகலை படிப்பிற்காக ஸ்காட்லாந்து சென்றார். இந்நிலையில், இரண்டு ஆண்டு கடுமையான உழைப்பிற்குப் பின் குளோபல் ஹெல்த் அண்ட் சொசைட்டியில் முதுகலை பட்டம் பெற்றுள்ளதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News July 19, 2024

BSNL சிம் கார்டுக்கு மாறும் வாடிக்கையாளர்கள்

image

நாடு முழுவதும் 27.50 லட்சம் பேர், புதிதாக BSNL சிம் கார்டு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர்டெல், ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளதால் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் வாடிக்கையாளர்கள் தற்போது BSNL நிறுவனத்தின் சிம் கார்டுகளை வாங்கி வருகின்றனர்.

News July 19, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: பாஜக முன்னாள் நிர்வாகி கைது

image

BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளுக்கு பண உதவி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், ரவுடி ஆற்காடு சுரேஷின் தோழியான அஞ்சலை, ஓட்டேரி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கெனவே 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

News July 19, 2024

மின்னல் தாக்கி 7 பேர் பலி

image

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், ம.பி.யில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 9 வயது சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த 2 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அஜய்கர் பகுதியில் மின்னல் தாக்கியதில், 3 ஆடுகளும் பலியாகின. ம.பி.யில்., அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News July 19, 2024

குரூப் 2, 2ஏ பணிகளுக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம்

image

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2,327 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜூன் 20இல் வெளியிட்ட TNPSC, தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று இரவு 11.59 வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, குரூப் 2, 2ஏ தேர்வுக்கு நாளை இரவு வரை அவகாசம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

சோளக்காட்டு பொம்மைக்கு பதிலாக சன்னி லியோன் படம்

image

பொதுவாக விவசாயிகள் தங்கள் காட்டில் விளையும் பொருள்களை முழுநேரம் பாதுகாக்கவும், திருஷ்டி படாமலும் இருக்க சோளக்காட்டு பொம்மைகளை வைப்பது வழக்கம். ஆனால், கர்நாடகாவில் விவசாயி ஒருவர் இவற்றுக்கு பதிலாக கவர்ச்சி நடிகை சன்னி லியோன், ரச்சிதா ராம் ஆகியோரது படங்களை மாட்டி வைத்துள்ளார். இதனால், திருஷ்டி கழிந்து அமோக விளைச்சல் இருப்பதாகவும், நல்ல லாபம் கிடைத்துள்ளதாகவும் விவசாயி தெரிவித்துள்ளார்.

News July 19, 2024

சூர்யா பிறந்தநாளில் ரீ-ரிலீசாகும் ‘வேல்’?

image

நடிகர்களின் பிறந்தநாளன்று அவர்களின் பழைய படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 23ஆம் தேதி அவர் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ‘வேல்’ படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிராமத்துக் கதையில் உருவான இதில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு யாரெல்லாம் வெயிட்டிங்?

error: Content is protected !!