India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விசாரணை, 3 நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மனு மீது விசாரணை நடத்த நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி சந்திரசூட் நியமித்தார். அதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 3 நீதிபதிகள் அமர்வு மனுவை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
வர்த்தக நேர தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் சரிவடைந்தது. இன்று காலை வர்த்தகத்தின்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.13ல் இருந்து ரூ.83.33ஆக சரிவடைந்தது. இறக்குமதியாளர்கள் அதிகளவு டாலரை வாங்குவது மற்றும் சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு உயர்வதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பாமக, விசிக, தமாகா உள்ளிட்ட தமிழக கட்சிகள் தேர்தல் பத்திர நன்கொடை பெற்றனவா, இல்லையா என்பது குறித்து சரியான தகவல் இல்லை. திமுக, அதிமுக குறித்து தகவல் வந்துள்ள நிலையில், மற்ற தமிழக கட்சிகள் குறித்து எதுவும் தெரியவில்லை. தேமுதிக தேர்தல் பத்திர நன்கொடை பெறவில்லை என பிரேமலதா அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் பாமக, விசிக, தமாகா குறித்து தகவல் இல்லாததுடன், அக்கட்சியினரும் கருத்து தெரிவிக்கவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களவைத் தேர்தல் பணிகள், தேர்தல் பரப்புரை, நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
2ஜி வழக்கு தொடர்பான CBIயின் மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க ஏற்றுக் கொண்டது டெல்லி உயர்நீதிமன்றம். 2ஜி அலைக்கற்றையை விற்பனை செய்ததில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறி அப்போதைய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் அனைவரும் நிரபராதிகள் என்று 2017ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை காங்., எம்.பி ராகுல் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நேற்றிரவு கெஜ்ரிவால் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், தேவையான சட்ட உதவிகளை செய்ய காங்கிரஸ் கட்சி தயார் என உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹760 உயர்ந்து ₹49,880க்கு விற்பனையான நிலையில், இன்று ₹280 குறைந்து ₹49,600க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ₹35 குறைந்து ₹6,200க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹79.50க்கும் கிலோவுக்கு ₹2,000 குறைந்து ₹79,500க்கும் விற்பனையாகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் 33 பேர் போட்டியிட உள்ளனர். அதில் 32 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர்பாராத விதத்தில் 5 பேருக்கு வாரிசு அடிப்படையில் சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயவர்தன், லோகேஷ் தமிழ்செல்வன் தனபால், ஆற்றல் அசோக்குமார் சவுந்தரம், சிங்கை ராமச்சந்திரன் கோவிந்தராஜ், பாபு பவுன்ராஜ் ஆகியோர் போட்டியிடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயர் இடம்பெறவில்லை. 2019 தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டு அன்புமணி தோல்வியடைந்தார். தொடர்ந்து, மாநிலங்களவை எம்.பியாக உள்ள அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் மீண்டும் அவர் மாநிலங்களவை எம்.பியாகவே தொடருவார் எனத் தெரிகிறது.
2024 ஐபிஎல்லில் ஒரு ஓவரில் 2 பவுன்சர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ஒரு பவுன்சருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது. அதற்கு மேல் வீசப்படும் பவுன்சர் நோபாலாக கருதப்பட்டது. இந்நிலையில் 2024 சீசனில், 2 பவுன்சர்கள் வீச பந்துவீச்சாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3வதாக பவுன்சர் வீசினால் அது நோபாலாக கருதப்படும்.
Sorry, no posts matched your criteria.