India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் நேற்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அரசு வழங்கிய விலையில்லா டி.வி, மின்விசிறியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தின் போர்பந்தர் தாலுகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 36 மணி நேரத்தில் 565 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. போர்பந்தர், ஜூனாகத், துவாரகா மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, கல்யாண்பூரில் 412 மில்லி மீட்டர், கேசோட்டில் 401 மில்லி மீட்டர், வாந்தாலியில் 353 மில்லி மீட்டர், ரனாவாவில் 330 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் இணைந்து பணியாற்றுவதில் தனக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என்று BCCI நிர்வாகத்திடம் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்காக விளையாடுவதுதான் முக்கியம் என்றும் கடந்த காலங்களில் ஏற்பட்ட வேறுபாடுகள் & கசப்பான மோதல்களை இந்திய அணிக்குள் கொண்டு வர மாட்டோம் எனவும் இருவரும் உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக முன்னாள் எம்.பி. வி.பி.சண்முகசுந்தரம் (75) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவு செய்தியறிந்து திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமா் மோடியை அமெரிக்காவின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் சிஇஓ ஜிம் டய்க்லெட் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பதிவில், “30 ஆண்டுகால நம்பகமான நண்பர்களாக இருக்கும் இரு நாடுகளும் தொழில்துறையின் திறன்களை அங்கீகரித்துள்ளன. மேலும், தொடர்ந்து பாதுகாப்பு & தொழில்துறையை வலுப்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவுத் துறை மத்திய அரசின் அதிகார வரையறைக்கு உட்பட்டது. வெளியுறவு அமைச்சக நிர்வாகத் தலைவரான வெளியுறவுத் துறை செயலாளரை மத்திய அரசே நியமிக்க முடியும். மாநிலங்கள் வெளியுறவுத் துறை செயலாளர்களை நியமிக்கவும், வெளிநாடுகளுடன் நேரடி தொடர்பு கொள்ளவும் கூடாது. இந்நிலையில் கேரளா தனக்கென தனி வெளியுறவுத் துறை செயலாளரை நியமித்திருப்பது மத்திய அரசின் அதிகாரத்தில் குறுக்கீடுவதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (UPSC) தலைவர் மனோஜ் சோனி பதவி விலகியுள்ளார். 2017இல் UPSC உறுப்பினரான சோனி, 2023 மே 16இல் தலைவரானார். பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 5 ஆண்டுகள் மீதமுள்ள நிலையில் குடியரசுத் தலைவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவர் ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா என தெரியவில்லை. அவர் ஆன்மிக தொண்டு புரிய பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் உள்ள 39 மாநில கட்சிகளின் நிதி நிலைமையை பகுப்பாய்வு செய்து, ADR அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022-23 ஆம் நிதியாண்டில் 39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ₹1,740 கோடியாகும். இதில் ₹737.67 கோடி வருவாயுடன் (42.38%) BRS முதலிடத்தில் உள்ளது. ₹333.45 கோடியுடன் (19.16%) திரிணாமூல் காங்கிரஸ் 2ஆவது இடத்திலும், ₹214.35 கோடியுடன் (12.32%) திமுக 3ஆவது இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கேரள மாநில வெளியுறவுத் துறை செயலராக ஐஏஎஸ் அதிகாரி வாசுகி நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை செயலராக அவர் பதவி வகிக்கிறார். இந்நிலையில், அவருக்கு கூடுதல் பொறுப்பாக வெளியுறவுத் துறை செயலர் பதவி அளிக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. வெளியுறவுத் துறை மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிலையில், கேரளாவின் இந்நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவில் கூடுதலாக 3,000 வீரர்களை ராணுவம் குவித்துள்ளது. ஜம்மு- காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்தில் ஏராளமான தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதையடுத்து ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி, நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதனைத் தொடர்ந்து, ஜம்முவில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் அவர்கள் ஈடுபடுவர் என ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.