News July 20, 2024

EDக்கு எதிரான வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு

image

அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. EDக்கு எதிராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், BRS கட்சியின் கவிதா உள்ளிட்ட 86 பேர் தொடர்ந்த மனுக்களில், சட்டப்பிரிவுகளை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சுந்தரேஷ், பெல்லா திரிவேதி ஆகியோர் ஜூலை 23இல் இவ்வழக்கை விசாரிக்கின்றனர்.

News July 20, 2024

இதுதான் எனது இலக்கு: சிந்து

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என பேட்மிண்டன் வீராங்கனை P.V.சிந்து தெரிவித்துள்ளார். கடும் போட்டிகள் நிறைந்த ஒலிம்பிக்ஸில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனக் கூறிய அவர், நாம் செய்யும் சிறிய தவறுகூட அனைத்தையும் மாற்றிவிடும் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், தங்கப் பதக்கத்தை வெல்ல திறமை வாய்ந்த வீரர்களை எதிர்கொள்ள தனது 200% உழைப்பை கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

News July 20, 2024

ATM கார்டு தொலைந்து விட்டதா? இப்படி முடக்கலாம்

image

தொலைந்து போன மற்றும் திருடு போன ATM கார்டுகளை வங்கிகளின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முடக்கலாம். அந்த எண்களை இங்கு காணலாம்.
* SBI- 1800 1234/1800 11 2211 *IOB- 1800 425 4445 *Indian Bank – 1800 425 00 000 *PNB – 1800 180 2222/ 1800 103 2222 *Bank oF india -1800 103 1906/ 1800 425 1112 *ICICI -1860 120 7777 *HDFC – 1800 1600 / 1800 2600 *Axis – 1860 419 5555/ 1860 500 5555

News July 20, 2024

பட்ஜெட்: ஆந்திரா, பிஹாருக்கு ₹1.30 லட்சம் கோடி ஒதுக்கீடு?

image

மத்தியில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு அளித்த தெலுங்கு தேசம், ஆந்திர தலைநகரை கட்டமைக்கவும், பிற திட்டங்களை செயல்படுத்தவும் மத்திய அரசிடம் ₹1 லட்சம் கோடி கேட்டதாக கூறப்பட்டது. இதேபோல், இன்னொரு கூட்டணி கட்சியான ஜேடியூ, பிஹாரில் திட்டங்களை செயல்படுத்த ₹30,000 கோடி கேட்டதாக சொல்லப்பட்டது. அந்த நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News July 20, 2024

‘காபி பேட்ஜிங்’ முறைக்கு செக் வைக்கும் அமேசான்

image

பணியாளர்கள் அலுவலகம் வருவதை உறுதி செய்ய ‘காபி பேட்ஜிங்’ முறைக்கு தடை விதிக்க அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம், ஹைப்ரிட் பணியாளர்கள் அலுவலகத்தில் 2 மணிநேரம் செலவிட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ‘ரிடர்ன் டு ஆஃபிஸ்’ எனும் பணியிட கொள்கையை தவிர்க்க பணியாளர்கள் வேலைக்குச் சென்று, வருகைப் பதிவுசெய்து, காபி குடித்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறும் நடைமுறையை ‘காபி பேட்ஜிங்’ அழைப்பர்.

News July 20, 2024

BREAKING: நீட் தேர்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்

image

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. நீட் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் மையங்களில் 100க்கும் மேற்பட்டோர் 600க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜார்க்கண்ட் ஹசாரிபாக் மையத்தில் 22 பேர், ஹரியானா ரோஹ்தக் மையத்தில் 45 பேர், ராஜஸ்தான் சிகர் மையத்தில் 83 பேர் 600க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

News July 20, 2024

ஓட்டல்கள், விடுதிகளுக்கு ஒரே விகித ஜிஎஸ்டி வரி?

image

சீசனுக்கு ஏற்ப ஓட்டல்கள், விடுதிகளுக்கு தற்போது 12%- 18% வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது கட்டண உயர்வுக்கும், நிர்வாக ரீதியில் குழப்பத்துக்கும் வழிவகுப்பதாக அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் குற்றம்சாட்டுகின்றனர். 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் பட்ஜெட்டில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒரே விகிதத்தில் 12% ஜிஎஸ்டி வரி விதிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News July 20, 2024

டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

image

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் 27ம் தேதி ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். பிரதமராக 3ஆவது முறையாக பதவியேற்றபின் முதல்முறையாக முதல்வர் அவரை சந்திக்க உள்ளார். தமிழகத்திற்கான புதிய திட்டங்கள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்த உள்ளார். மே.வ முதல்வர் மம்தா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் இதில் பங்கேற்க உள்ளனர்.

News July 20, 2024

விளையாட்டு போட்டியா? இல்லை விருந்து போட்டியா?

image

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. 329 விளையாட்டு பிரிவுகளில் போட்டிகள் நடக்கவுள்ள. அதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கென பிரத்யேகமாக பல நாடுகளைச் சேர்ந்த 1,500க்கும் (40,000 உணவுகள் நாள்தோறும்) மேற்பட்ட உணவு வகைகள் விருந்தில் பரிமாறப்படவுள்ளன. இதற்காக 200-க்கும் மேற்பட்ட செஃப்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

News July 20, 2024

நீலகிரி, கோவையில் இன்றும் கனமழை

image

கடந்த 5 நாள்களுக்கு மேலாக நீலகிரி, கோவையில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!