News July 20, 2024

போக்குவரத்துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

image

மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டுமென ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பில், அவர்கள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் மனிதாபிமான முறையில் ஒத்துழைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இருக்கையில் அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தரும்படியும், அவர்களது இருக்கைகளுக்கு மேல் ஸ்டிக்கர்களை சரியாக ஒட்டும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 20, 2024

ருதுராஜூக்கு ஆதரவாக களமிறங்கிய CSK ரசிகர்கள்

image

இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறாதது பயங்கர சர்ச்சையாக மாறியிருக்கிறது. ஜிம்பாப்வே தொடரில் சொதப்பிய கில், ஜெஸ்வால் அணியில் இருக்கும்போது, ஏன் ருதுராஜை நீக்க வேண்டும். பிசிசிஐ-யின் அணித் தேர்வு ஒருதலைபட்சமாக உள்ளது என விமர்சிக்கும் நெட்டிசன்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள், ருதுராஜை அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

News July 20, 2024

HDFC வங்கியில் டெபாசிட் அதிகரிப்பு

image

HDFC வங்கியின் முதல் காலாண்டு (Q1) முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 35% அதிகரித்து, ₹16,175 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டு ₹11,952 கோடியாக இருந்தது. மொத்த வருவாயைப் பொறுத்தமட்டில், 44.77% உயர்ந்து, ₹55,816.67 கோடியில் இருந்து ₹83,701.25 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த டெபாசிட் 24.4% உயர்ந்து ₹23.79 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மோசமான கடன்கள் (NPA) 0.39%ஆக உள்ளது.

News July 20, 2024

உலகளவில் அதிகரிக்கும் டிஜிட்டல் பேமென்ட்

image

உலகளவில் டிஜிட்டல் பேமென்ட் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் சுமார் 60 லட்சம் புதிய பயனாளர்கள் UPI வசதியில் இணைகின்றனர். தற்போது, RuPay கிரெடிட் கார்டு பயனாளர்கள் UPI வசதியை பயன்படுத்த முடியும் என்பதால், இந்த வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்தியாவில் UPI பரிவர்த்தனை ஜூன் மாதத்தில் 49% உயர்ந்து, 1,390 கோடியாக அதிகரித்துள்ளது.

News July 20, 2024

லட்சத்தீவில் புதிய விமான தளம் அமைக்கும் மத்திய அரசு

image

லட்சத்தீவின் மினிகாய் தீவில் புதிய விமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தென் சீன கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவர இம்முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் ராணுவ கண்காணிப்பு & சரக்கு போக்குவரத்திற்கு உதவும் இந்த விமான தளத்தின் முழுக் கட்டுப்படும் இந்திய விமானப்படையிடம் இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளன.

News July 20, 2024

காவிரி ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை

image

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, கபினி, KRS அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 65,000 கன அடி நீர் வருவதால், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

News July 20, 2024

மழைப் பொழிவை எப்படி அளக்கிறார்கள்?

image

பருவமழை காலங்களில், 10, 15, 20 மி.மீ., மழை பொழிந்தது என வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லி கேட்டிருப்போம். அவை எவ்வாறு அளவிடப்படுகிறது என்பது குறித்து காணலாம். இந்தியாவைப் பொறுத்தவரை பொதுவாக ‘Rain gauge’ எனக் கூறப்படும் மழை மானி கருவி மூலமே மழைப் பொழிவு கணக்கிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெய்த மழையின் மொத்த அளவை குறிப்பர். ஒரு மி.மீ., மழை என்பது, சதுர மீட்டருக்கு 1 லி., என்பதற்குச் சமம்.

News July 20, 2024

Budget: தனிநபர் வருமான வரி குறையுமா?

image

மத்திய பட்ஜெட்டில் தனிநபருக்கான வரி வரம்பு உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மிடில்கிளாஸ் மக்களிடம் எழுந்துள்ளது. ஆனால், புதிய வருமான வரி விதிப்புக்கு உட்பட்ட தனிநபர்களுக்கு ஆண்டு வருமானம் ₹7,00,000 (மாத சம்பளம் ₹58,333) வரை இருந்தால், வரி செலுத்த வேண்டியதில்லை என்ற சூழல் இருப்பதால், இந்த வரம்பை மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

News July 20, 2024

DC-யில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேற்றம்?

image

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட்-ஐ விடுவிக்க, அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த IPL தொடரில் டெல்லி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ரிஷப்-ஐ விடுவித்து, அவருக்கு பதில் வேறு ஒருவரை எடுக்க DC நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை டெல்லி விடுவித்தால், அவரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கும் என கூறப்படுகிறது.

News July 20, 2024

தவெகவில் விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம்?

image

மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், விஜய் தலைமையிலான தவெக கட்சி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில், கட்சியில் சேரும் இளைஞர்களை ஒருங்கிணைத்து புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதன்படி, 30 அணிகளை உருவாக்கி, அதன் கீழ் சுமார் 2 லட்சம் நிர்வாகிகளை நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!